being created

எஸ். இஸ்மாலிஹா

From Tamil Wiki

எஸ். இஸ்மாலிஹா

வாழ்க்கைக் குறிப்பு

கண்டி புசல்லாவையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சேகுதாவுத்; தாய் சித்தி ரசீதா. புசல்லாவவை பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். பாடசாலை அதிபரான இவர் ஓய்வுபெற்ற பின்னர் தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபராக உள்ளார்.


தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பயணம் முடியவில்லை எனும் சிறுகதை 1994ஆம் ஆண்டு காங்கிரஸ் பத்திரிகையில் எழுதியதன் மூலம் எழுத்துலகிற்குள் பிரவேசித்துள்ளார். நான், குன்றின் குரல், கொந்தளிப்பு ஆகிய சஞ்சிகைகளிலும் தினகரன், வீரகேசரி, தினக்குரல், நெத் ஆகிய பத்திரிகைகளிலும் மத்திய மாகாண சாகித்திய விழா மலரிலும் பிரான்ஸ் நாட்டு பாரிஸ் முரசு பத்திரிகையிலும் இவரின் சிறுகதை மற்றும் குறுநாவல் இடம்பெற்றுள்ளன. உழைக்கப் பிறந்தவர்கள், அம்மா ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களிலும் மை, பெண்கள் சந்திப்பு மலர் 2005 ஆகியவற்றிலும் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கமும் மாவத்த சஞ்சிகை வெளியீட்டாளருமான சிங்கள கவிஞர் பராக்கிரம கொடிதுவக்குவின் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்து சா லங்கா, பிபிதென பெய ஆகிய நூல்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக் கவிதைகள் தமிழில் விழிப்பு என்ற சஞ்சியில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஷர்மிலாவின் இதயராகம் திரைப்படத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளார்.

விருதுகள்

  • இரத்தின தீப விருது - 1990
  • 26 வருட சேவைக்காக தினகரன் விருது

நூல் பட்டியல்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.