திருவொற்றியூர் ஒருபா ஒருபது

From Tamil Wiki
Revision as of 12:22, 16 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான 'ஒருபா ஒருபது' வகையில் அமைந்த நூல். சைவ நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான 'ஒருபா ஒருபது' வகையில் அமைந்த நூல். சைவ நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நூல் பற்றி

வெண்பாவிலாவது, அகவல் பாவிலாவது பத்துப்பாடல் பாடுவது என்று பன்னிருபாட்டியல் இதற்கு இலக்கணம் கூறுகிறது. அகவற்பாவால் அமைந்தது. திருவொற்றியூர் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவனைப் பாடுகிறது. நூல் ‘இருநிலம்’ என்னும் தொடருடன் தொடங்கி ‘இருநிலத்தே’ என்று அதே தொடரில் துடிகிறது. இதனை இயற்றியவர் திருவொற்றியூரைச் சேர்ந்த பட்டணத்துப் பிள்ளையார் எனப்படும் பட்டினத்தடிகள்.

நூலின் வழி அறியவரும் சிவனின் செய்திகள்

ஆண் அல்லது பெண் என ஓருருவின் பெற்றி இல்லாதவன் சிவன், பாவகன் (தீ), பரிதி, மதி ஆகிய மூன்று கண்களை உடையவன், விசும்பே அவன் உடம்பு, எட்டுத் திசையும் அவனுக்கு எட்டுத் தோள், கடல் உடை, மண்டலம் அவன் அல்குல் (பெண்ணுறுப்பு), மணிமுடிப் பாந்தள் (பாம்பு) அவன் தாள், மாருதம் (காற்று) அவன் உயிர்க்கும் மூச்சு, ஓசை அவன் வாய்மொழி, நிரம்பிய ஞானம் அவன் உணர்வு; உலகின் நீர்மை, நிற்றல், சுருங்கல், விரிதல், தோற்றம் – ஐந்தும் தொழில்; அமைதல், அழிதல், பெயர்தல், இமைத்தல், விழித்தல் – ஐந்தும் இயல்பு

பாடல் நடை

இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றியொன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே

உசாத்துணை