being created

பழனியப்பா பிரதர்ஸ்

From Tamil Wiki
Revision as of 00:02, 10 February 2024 by ASN (talk | contribs) (Para Added.)

பழனியப்பா பிரதர்ஸ் (1945) ஒரு பதிப்பக நிறுவனம். செ.மெ. பழநியப்பச் செட்டியார், 1945-ல், திருச்சியில் இந்நிறுவனத்தைத் தொடங்கினார். 1953 முதல், இந்நிறுவனம் சென்னையிலிருந்து செயல்படத் தொடங்கியது. பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடுகள் சாகித்ய அகாதமி விருது, பாலபுரஸ்காா் விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றன. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் 3000-த்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டது. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.

தோற்றம், வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தைச் சோ்ந்த செ.மெ.பழனியப்பச் செட்டியார், திருச்சியில், 1942-ல், எழுதுபொருள் நிலையம் மற்றும் அச்சகம் ஒன்றை அமைத்துத் தொழில் செய்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த ஐயன்பெருமாள் கோனாா், தான் எழுதிய பாடக்குறிப்புகளை அச்சாக்கி மாணவா்களுக்கு விநியோகிக்க விரும்பி பழனியப்ப செட்டியாரைத் தொடர்புகொண்டார். அந்த வகையில் கோனாா் தமிழ் உரை நூல் உருவானது.

அந்நூலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் இலக்கியம் குறித்த நூல்களை வெளியிடுவதற்காக, செ.மெ.பழனியப்ப செட்டியார், 1945-ல், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, கோ. வில்வபதி போன்றோரின் நூல்களையும் சிறார்களுக்கான பல நூல்களையும் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டது.

1953 முதல், பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து செயல்படத் தொடங்கியது. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாா், இதயம் பேசுகிறது மணியன், அழ. வள்ளியப்பா போன்றோரின் நூல்களை வெளியிட்டது. சிறார்களுக்கான பல நூல்களையும் வெளியிட்டது. தொடர்ந்து முன்னணி எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், ஆய்வாளர்களின் படைப்புகளை வெளியிட்டது.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.