under review

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

From Tamil Wiki
Revision as of 23:33, 11 January 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Table and Name List Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது. இவ்விருது, இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தோற்றம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கலைஞர் மு. கருணாநிதி, தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’யை நிறுவினார். அந்த அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோராண்டும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருது பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் மதிப்புச் சான்றிதழ், நினைவுப்பரிசு ஆகியவற்றைக் கொண்டது.

விதிமுறைகள்

செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தொல்லியல், இலக்கியத் திறனாய்வு, கல்வெட்டியல், படைப்பிலக்கியம், நாணயவியல், மொழிபெயர்ப்பு, இலக்கிய ஆய்வு, இசை, நடனம், ஓவியம் மற்றும் சிற்பம், மொழியியல் ஆய்வு போன்றவற்றில் செய்யப்படும் ஆய்வு நூல்களுக்கும், பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும் அமைந்துள்ள நூல்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.

தனித்தன்மையும் மேன்மையும் உலகளாவிய ஏற்பும் பெற்ற ஒரு நூலிற்காக அல்லது ஒர் அறிஞரின் வாழ்நாள் பங்களிப்பிற்காக இவ்விருது அளிக்கப்படுகிறது. விருது பெறும் அறிஞர் எந்நாட்டினைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; விருது பெறும் நூல் அறிவுலகைக் கவர்ந்த பெருமையுடையதாயின் எந்த மொழியிலும் இருக்கலாம்.

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்றோர் பட்டியல்

வ.எண் ஆண்டு விருதாளர் பெயர்
1 2009 பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா
2 2010 முனைவர் வீ.எஸ். ராஜம்
3 2011 பேராசிரியர் பொன். கோதண்டராமன்
4 2012 பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
5 2013 பேராசிரியர் ப. மருதநாயகம்
6 2014 பேராசிரியர் கு. மோகனராசு
7 2015 பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
8 2016 பேராசிரியர் கா. ராஜன்
9 2017 பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்
10 2018 கவிஞர் ஈரோடு தமிழன்பன்
11 2019 பேராசிரியர் கு. சிவமணி
12 2020 முனைவர் ம. இராசேந்திரன்
13 2021 முனைவர் க. நெடுஞ்செழியன்
14 2022 முனைவர் ழான் லூய்க் செவ்வியார்
15 2023 பேராசிரியர் க. இராமசாமி

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.