under review

வேலன் வெறியாட்டு

From Tamil Wiki
Revision as of 04:17, 31 December 2023 by Tamizhkalai (talk | contribs)

வேலன் வெறியாட்டு சங்ககாலப் பாடல்கள் வழி அறியவரும் தமிழர் சடங்கு. இந்தச்சடங்கு பற்றி வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன், வெறிபாடிய காமக்கண்ணியார் ஆகிய புலவர்கள் எழுதிய பாடல்களில் குறிப்பு உள்ளது.

வேலன் வெறியாட்டு பற்றி

தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி உடல் மெலிந்து சோர்வுறுவதைக் கண்டு அவளின் அன்னை பேய் பிடித்திருக்குமோ என்று கருதி வேலனை வெறியாட்டு பூசை நடத்த அழைக்கிறாள். இது மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சியில் நடக்கும் சடங்குமுறை. பலவகையான உணவுப் பொருள்களை முருகனுக்குப் படைத்து, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று பலி கொடுத்து தலைவியின் நெற்றியைத் தடவி அவளின் துன்பத்தைப் போக்கும் சடங்கு.

பாடல்

முருகயர்ந் துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.

உசாத்துணை


✅Finalised Page