சக்தி பீடங்கள்

From Tamil Wiki
Revision as of 22:48, 14 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட ஆலயங்களே சக்தி பீடங்கள் என அழைக்கப்படுகின்றன.

சக்தி பீடங்களின் வகைகள்

சக்தி பீடங்கள் பொதுவாக நான்கு வகைப்படும். அவை

  • நவசக்தி பீடங்கள்
  • அட்சர சக்தி பீடங்கள்
  • மகா சக்தி பீடங்கள்
  • ஆதி சக்தி பீடங்கள்

தேவிக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும், அவற்றில் 64 பீடங்கள் குறிப்பிடத்தகுந்தவை என்றும் தேவி பாகவதம் கூறுகிறது. தந்திர சூடாமணி 51 சக்தி பீடங்கள் பற்றிக் கூறுகிறது. சக்தி பீடங்களின் எண்ணிக்கை குறித்து சமய, ஆன்மிகத் தத்துவ நூல்களில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.