தூது இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
தூது தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்திப் பாடல்களில் ஒரு கூறாக இருந்த தூதுப் பொருண்மை, பதினான்காம் நூற்றாண்டில் தனித்த ஓர் இலக்கிய வகையாக உருவெடுத்தது. காதலைக் கூறும் சிற்றிலக்கியங்களான தூது, உலா, மடல் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. இவை மூன்றுமே கலிவெண்பாவால் பாடப்படுபவை.
தூது இலக்கிய நூல்கள் பட்டியல்
பொ.யு. பதினான்காம் நூற்றாண்டு தொடங்கி, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு வரை பல்வேறு வகையான தூது இலக்கிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில...