under review

கமலா விருத்தாசலம்

From Tamil Wiki
Revision as of 12:43, 3 March 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/reviewed by Je)
கமலா விருத்தாச்சலம்

கமலா விருத்தாச்சலம் ( 1917- 1995) தமிழில் கதைகள் எழுதிய எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவி.

பிறப்பு, கல்வி

1917 ல் திருவனந்தபுரத்தில், பொதுப் பணித்துறையில் புகழ்பெற்ற ஒப்பந்ததாரராகத் திகழ்ந்த பி.டி.சுப்ரமணிய பிள்ளைக்கு பிறந்தார். திருவனந்தபுரத்தில் பள்ளியிறுதி வரை பயின்றார்

தனிவாழ்க்கை

தன் பதினைந்தாம் வயதில் சொ.விருத்தாச்சலம் ( புதுமைப்பித்தன் ) த்தை மணர்ந்தார். தினகரி என்று ஒரு மகள். புதுமைப்பித்தன் 1948 ல் மறைந்தார்.

புதுமைப்பித்தன் - கமலா அம்மாள்

இலக்கியவாழ்க்கை

1935க்குப் பின் எழுதத் தொடங்கிய கமலா விருத்தாச்சலம் தினமணி, கிராம ஊழியன் இதழ்களில் கதைகளை வெளியிட்டார். ’வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனைவிக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடையாது. அவர் உயிரோடு இருந்த காலங்களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாள்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக்கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் எனப் பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன்னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூட தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்' என்று தன் கணவர் புதுமைப்பித்தனைப் பற்றிய தன் நினைவுகளை கமலா விருத்தாசலம் எழுதியுள்ளார் (புதுமைப்பித்தனின் `சம்சார பந்தம்’ என்னும் நூல்)

இவர் எழுதிய சிறுகதைகள் "காசுமாலை' என்னும் பெயரில் நூலாக 1971-ம் ஆண்டில் வந்துள்ளது.

சம்சாரபந்தம்

மறைவு

1995ஆம் ஆண்டில் மறைந்தார்

நூல்கள்

  • புதுமைப்பித்தனின் சம்சார பந்தம்
  • காசுமாலை
  • கண்மணி கமலாவுக்கு (புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.