under review

உலகம்மையம்மாள்

From Tamil Wiki
Revision as of 03:32, 3 October 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

To read the article in English: Ulagammaiammal. ‎


உலகம்மையம்மாள் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். சிவஞானப் பாடல்கள் தொகுப்புநூல் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வன்னிகோன்ஏந்தலில் குப்பையாண்டியாப்பிள்ளைக்கு 1856-ல் மகளாகப் பிறந்தார். கல்லிடைக்குறிச்சி மடத்திலிருந்து வந்த ஒரு பெரியவர் மந்திர உபதேசம் செய்யவே ஓம் சரவணபவா எனும் ஆறெழுத்தருமறையை மனதில் நிறுத்தி வந்தார். கழுகுமலை ஆதிநாராயணன்பிள்ளைக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். பன்னிரெண்டு ஆண்டுகள் இல்லறவாழ்விற்குப்பின் கணவன் காலமாகிவிட துறவற வாழ்க்கை மேற்கொண்டார்.

ஆன்மீக வாழ்க்கை

காசிக்கு ஆன்மீகப் பயணம் செய்தார். சிந்துப்பூந்துறையிலிருந்த குருவிக்குளம் வேதநாயக அடிகளிடத்திலும், தென்காசி தாலுகா ஆயக்குடி பரமசிவ அடிகளிடத்திலும் அருளுரை பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

விருத்தம், வெண்பா, கண்ணி, இசைப்பாடல்கள் என பன்னிரெண்டு நூல்களைப் பாடினார். இவை சிவக்ஞானப் பாடல்கள் என்ற பெயரில் தொகுப்பாக 1914-ல் அச்சிடப்பட்டது.

பாடல் நடை

நச்சுமா மரம்போல் நாயினன் வளர்ந்து
நாளேலாம் கழித்தனன் அவமே
இச்சையே புரிந்தேன் இடரெலாம் விழைந்தேன்
எட்டிபோல் இருக்கின்றேன் எந்தாய்
செச்சையிலாடுந் திருவடி கண்டு
சென்றுநின் றடைந்திடாப் பாவி
பச்சம்வைத் தென்னைப் பரவெளி சேர்த்தான்
பாவகி அடைக்கலம் உனக்கே

நூல் பட்டியல்

  • சிவக்ஞானப் பாடல்கள்

உசாத்துணை


✅Finalised Page