being created

கணியான் தோற்றக் கதை

From Tamil Wiki
Revision as of 22:35, 21 September 2023 by Navingssv (talk | contribs)

கணியான் தோற்றக் கதை நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப்பாடலகளுள் ஒன்று. கணியான் இனத்தவரின் தோற்றம் குறித்த வாய்மொழி கதைப்பாடல் இது. இது நாட்டார் கோவில் திருவிழாக்களில் பாடப்படுகிறது.

கதை

சுடலைமாடன் ஏடு கதை

சிவன் பார்வதியை பாதாள உலகத்திலிருந்து கவர்ந்து சென்ற பின் தட்சராஜன் உலகம் முழுவதையும் தன் கொடைக்கீழ் கொண்டுவர விரும்பினான். அதற்காக யாகம் ஒன்றை செய்தான். அதில் கிடைத்த அவிர்பாகத்தை சிவனுக்கு கொடுக்கக் கூடாது என முனிவர்களுக்கு கட்டளையிட்டான். இதனையறிந்து கோபமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து அதிலிருந்து வீரப்பத்திரனை பிறக்கச் செய்தார். உடன் பத்ரகாளியும் பிறந்தாள். சிவன் நெற்றிக் கண்ணை திறந்த உஷ்ணத்தால் பார்வதி உடல் வியர்த்த போது அதிலிருந்து பேய்ப்படைகள் தோன்றின. அனைவருமாக சென்று தட்சனின் யாகத்தை அழித்தனர். வீரபத்ரன் தட்சனின் தலையை வெட்டி கொய்தான்.

பார்வதி சிவனை பணிந்து தன் தந்தைக்கு உயிர் கொடுக்கும் படி வேண்டினாள். சிவன் அருகிலிருந்த ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் தலையில் பொருத்தி அவரை உயிர் பெறச் செய்தார். உயிர் பெற்ற தட்சன் தனக்கு தவம் செய்யும் வல்லமை வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவன் “ஒரு யாகம் வளர்த்து அதில் சுடலைமாடன், பிரம்மராக்கு, சக்தியை உயிர் பெற செய்து கயிலாத்துக்கு கொண்டு வந்தால் வேண்டும் வரம் கிட்டும்” என்றார்.

சிவன் சொல் கேட்டு தட்சன் யாகம் ஒன்றை நிகழ்த்தினான். அதிலிருந்து முதலில் பிரம்மராக்கு பிறந்து வந்தாள். இரண்டாவது சுடலை மாடன் பிறந்தான். ஆனால் சுடலை மாடன் யாகத்திலிருந்து வர மறுத்தான். தனக்கு பெரிய பூசை படையல் வேண்டும் என தட்சனிடம் சொன்னான். சுடலைமாடன் தனக்கு வேண்டியதை தட்சனிடம் பாட்டாக பாடினான். அதன் இறுதியில் மகுட சத்தத்துடன் நாக்கு வெட்டி பேய் முகத்துடன் இருக்கும் கணியான் வந்தால் தான் நான் வருவேன் என்றான்.

கணியானை பிறப்பிக்க வேண்டி தட்சனும், பிற தேவர்களும் சிவனிடம் வந்தனர்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.