காக்கைப்பாடினியார்

From Tamil Wiki
Revision as of 22:29, 17 September 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "காக்கைப்படினியார் காக்கைபாடினியம் என்னும் இலக்கண நூலை எழுதியவர். காக்கைபாடினியார் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர். பார்க்க : காக்கைப்பாடினியார்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

காக்கைப்படினியார் காக்கைபாடினியம் என்னும் இலக்கண நூலை எழுதியவர். காக்கைபாடினியார் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.

பார்க்க : காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்

வாழ்க்கைக் குறிப்பு

காக்கைப்பாடினியம் இயற்றிய காக்கைப்படினியார் பொ.யு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.

இலக்கிய வாழ்க்கை

தொல்காப்பியர் செய்யுளில் வரும் அசைக்கூறுகளை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்காகப் பகுத்துக் காட்டினார். தொல்காப்பிய வழிவந்த இந்த நூல் நேர்பு, நிரைபு அசைகளை விலக்கிவிடுகிறது. இதன் வழிவந்த யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்கள் நேர், நிரை என்னும் இரண்டு அசைகளையே குறிப்பிடுகின்றன.

மேலும் நாலசைச்சீர் பற்றிய குறிப்பும் காக்கைபாடினியத்தில் வருகிறது.

உசாத்துணை

Template:Being cretaed