கிஃப்ட் சிரோமணி

From Tamil Wiki
Revision as of 23:53, 30 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கிஃப்ட் சிரோமணி

கிஃப்ட் சிரோமணி (கிஃப்ட்; டாக்டர் கிஃப்ட்; டாக்டர் கிஃப்ட் சிரோமணி; டாக்டர் ஜி. சிரோமணி; Dr Gift Siromoney) (ஜூலை 30, 1932 - மார்ச் 21, 1988) ஒரு பன்முக ஆய்வாளர். சுற்றுச்சூழல், வரலாறு, புள்ளியியல் மற்றும் கணிதத் துறை அறிஞர். சிற்ப ஆராய்ச்சி வல்லுநர். கோலங்களில் இருக்கும் கணக்கு, வகைமுறை பற்றிய ஆய்வினை நிகழ்த்தினார். சிந்துவெளிக் குறியீடுகள் பற்றிய ஆய்வுகளைச் செய்தார். வரலாற்றாய்வுகள் பலவற்றை முன்னெடுத்துப் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். கிஃப்ட் சிரோமணி, ஆபிரகாம் பண்டிதரின் தம்பி பேரன்.

பிறப்பு, கல்வி

கிஃப்ட் சிரோமணி, தஞ்சாவூரில், ஜூலை 30, 1932-ல் பிறந்தார். தஞ்சாவூரில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இடை நிலை வகுப்புப் பயின்றார். 1950-53-ல், சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்று கணிதத்தில் இளநிலை (BA Hons.) பட்டம் பெற்றார். 1955-ல், முதுகலை (M.A.) பட்டம்  பெற்றார். புள்ளியியல் பயின்று 1959-ல் முதுநிலை (M.Sc. Statistics) பட்டம் பெற்றார். 1958-59-ல், நியூயார்க்கில் உள்ள யூனியன் இறையியல் பயிற்சிக் கல்லூரியில் பயின்று ‘எக்குமெனிகல் ஃபெலோ' (மதம்) (Ecumenical Fellow - Religion) பட்டம் பெற்றார். அதே ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எக்குமெனிகல் ஃபெலோ (தகவல் கோட்பாடு) (Ecumenical Fellow (Information Theory) பட்டம் பெற்றார். 1964-ல், சென்னை கிறித்தவக் கல்லூரியில் தகவல் கோட்பாடு பற்றிய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1974-ல், மேரிலாந்து பல்கலைக்கழகத்தில், கணினி அறிவியலில், ஹோமி பாபா ஃபெலோ Homi Bhabha Fellow (Computer Science) பெற்றார்.

தனி வாழ்க்கை

கிஃப்ட் சிரோமணி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1953-54 வரை கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1954-67 வரை, சென்னை கிறித்தவக் கல்லூரியில், கணித விரிவுரையாளராகப் பணி செய்தார். 1967-70 வரை, அதே கல்லூரியில், கணிதம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து 1970 முதல் 1988 வரை புள்ளியியல் துறைத் தலைவராகப் பணிபுரிந்தார்.  

கிஃப்ட் சிரோமணி மணமானவர். மனைவி ராணி கல்லூரிப் பேராசிரியர். ஒரே மகன், அருள் சிரோமணி இசைக் கலைஞர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை