ஜெயமோகன்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
ஜெயமோகன் (ஏப்ரல் 22, 1962) இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். உலகின் மிகப்பெரிய நாவலான வெண்முரசினை எழுதியவர். இவருடைய முதல் நாவலுக்கு (ரப்பர் - 1988) ‘சம்ஸ்கிருதி சம்மான் விருது’ கிடைத்தது. இவரின் எழுத்துக்களத்தின் முதன்மைக்கருக்களாக ஆன்மிகத் தேடலும் அற உசாவலும் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்புகள்
பிறப்பு
எஸ். பாகுலேயன் பிள்ளை - பி. விசாலாட்சி அம்மா தம்பதியினருக்கு ஏப்ரல் 22, 1962 இல் அருமனை அரசு மருத்துவமனையில் ஜெயமோகன் பிறந்தார்.
கல்வி
பத்மநாபபுரத்தில் ஒன்றாம் வகுப்பு படித்தார். இரண்டாம் வகுப்பினைக் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் என்ற ஊரில் அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றார். அதன்பின்னர் முழுக்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை அருமனை [நெடியசாலை] அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 இல் பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிநாட்களிலேயே எழுத ஆரம்பித்தார். முதல்கதை ‘ரத்னபாலா’ என்ற சிறுவர் இதழில் வெளிவந்தது.
சிறுவயதில் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ. நூலகம், அருமனை அரசு நூலகம் ஆகியவைற்றைப் பெரிதும் பயன்படுத்தினார். அதன்பின்னர் திருவட்டாறு ஸ்ரீ சித்ரா நூலகத்தில் மலையாள நாவல்களைப் படித்தார்.
1979இல் புகுமுக வகுப்பில் வணிகவியல்துறையைத் தேர்ந்தெடுத்து மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில் பயின்றார். 1980 இல் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். 1982 வரை பயின்றார். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யவில்லை.
பணி
1984 இல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியில் சேர்ந்தார்.