திருத்தொண்டர் காப்பியம்

From Tamil Wiki
Revision as of 23:56, 24 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திருத்தொண்டர் காப்பியம்

திருத்தொண்டர் காப்பியம் (2007) கிறித்தவக் காப்பிய நூல்களுள் ஒன்று. கிறித்தவக் காப்பியங்களுள் இறை அடியார்களைத் தலைமை மாந்தர்களாகக் கொண்ட காப்பியங்கள் இரண்டு. ஒன்று, அன்னை தெரேசா காவியம். மற்றொன்று திருத்தொண்டர் காப்பியம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரத்த சாட்சியாக மரித்த தேவசகாயம் நீலகண்டப் பிள்ளையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது. திருத்தக்கத் தேவர்  கம்பர், சேக்கிழார் மரபில் முற்றிலும் விருத்தப் பாக்களால் ஆன இந்நூலை இயற்றியவர், பேராசிரியர், முது முனைவர் சூ. இன்னாசி.