under review

சங்கர நாராயண விலாசம்

From Tamil Wiki
Revision as of 23:43, 4 August 2023 by Navingssv (talk | contribs) (Created page with "சங்கர நாராயண விலாசம் மராட்டியர் ஆட்சி காலத்தில் இயற்றிய நாடக நூல். == நூலாசிரியர் == இந்நூலின் ஆசிரியர் ஆபத்சகாய பாரதி. == காலம் == மோடி ஆவணக் குறிப்பில் இடம்பெற்றுள்ள, “ஆரவி - சங்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சங்கர நாராயண விலாசம் மராட்டியர் ஆட்சி காலத்தில் இயற்றிய நாடக நூல்.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் ஆபத்சகாய பாரதி.

காலம்

மோடி ஆவணக் குறிப்பில் இடம்பெற்றுள்ள, “ஆரவி - சங்கரநாராயண விலாச நாடகம் - பூர்வகசிவ விஷ்ணு சரித்திர (பக்கம் 48)” என்னும் குறிப்பின் மூலம் இந்நூல் சாகேஜி மன்னரின் காலத்தில் இயற்றப்பட்டது தெரிகிறது. சாகேஜி மன்னரின் காலம் பொ.யு. 1684 - 1712.

சுவடி

இந்நூலின் சுவடி தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் தெலுங்கு நாடகப் பிரிவில் ‘சங்கர நாராயணக் கல்யாணம்’ என்னும் பெயரில் படியெடுக்கப்பட்டுள்ளது. ’சங்கர நாராயண விலாசமும்’, ‘சங்கர நாராயணக் கல்யாணமும்’ ஒன்றா அல்லது இரு வேறு நூல்களா எனத் தெரியவில்லை.

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.