under review

பட்டாபிராமைய்யர்

From Tamil Wiki
Revision as of 14:46, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

To read the article in English: Pattabirama Iyer. ‎

பட்டாபிராமைய்யர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். ஜாவளிகள் எனப்படும் வகையில் பல பாடல்களை இயற்றியவர்.

தனிவாழ்க்கை

இவர் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் பிறந்தவர். குமாஸ்தாவாக வாழ்க்கையைத் துவங்கியவர். இவருடைய இசைத்திறனால் மைசூர் சாமராஜ உடையார் சமஸ்தானத்தில் வேலை கிடைத்தது.

இசைப்பணி

பட்டாபிராமைய்யருடைய கீர்த்தனங்களில் ’தாலவன’ (தாலம் - பனை) என்னும் முத்திரையைப் பயன்படுத்தினார். முத்துஸ்வாமி தீக்ஷிதர் போன்றோர் ஆங்கில் நோட்டுகளை அமைப்பதைப் பார்த்து இவர் அதுபோல் தாலவன என்னும் முத்திரையுடன் ஜாவளிகள் இயற்றி இருக்கிறார். இவருடைய ஜாவளிகள் காஞ்சீபுரம் தனக்கோடி அம்மாள், கோயம்புத்தூர் தாயி, பங்களூர் நாகரத்தினம்மாள் ஆகியோர் பாடி வெளியிட்ட இசைத்தட்டுக்களால் கிடைத்திருக்கின்றன. இவர் எழுதிய 9 சரணங்கள் கொண்ட தமிழ் கீர்த்தனத்தில் ஒரு பகுதி:

ராகம்: ஹிந்துஸ்தானி பெஹாக், ஆதிதாளம்
பல்லவி:
வந்தருள்வாய் சுந்தரீ மணிமுத்து நீ (வந்தருள்)
அனுபல்லவி:
அந்தி பகலுன்றனை நினைந்து தினம் வந்திக்கிறேன் (வந்தருள்)
சரணம்:
பாடகம் கொலுசு தங்கப் பதங்களில் பாதசரம்
கண்டறிந்தானந்தத் தோடாடிட வேடிக்கையைப்
பங்கஜம் போன்ற கைகளில் வங்கி
கனகாங்கி மோதிரங்களைத் தரித்தெல்லா
வரங்களைக் கொடுப்பதற்கு (வந்தருள்)
கால காலனாகிய
தாலவன லோலருக்கனு
கூலம் பிடுகந் நாயகி
பாலனைப் பாலிப்பதற்கு (வந்தருள்)

மாணவர்கள்

  • நாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பாலசரஸ்வதியின் தாய் ஜயம்மாள்
  • பாலசரஸ்வதியின் ஆசிரியர் கௌரியம்மாள்
  • கர்னாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரியின் தாய் லலிதாங்கி

இதர இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page