நரசய்யா

From Tamil Wiki
Revision as of 17:07, 5 May 2023 by Ramya (talk | contribs) (Created page with "நரசய்யா (காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == நரசய்யா ஒரிசாவில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். கப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நரசய்யா (காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நரசய்யா ஒரிசாவில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றார். சென்னையில் வசிக்கிறார்.

பணி

1949-ல் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963-ல் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965-ல் விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். இக்காலத்தில் இவர் வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்தார். நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

நரசய்யாவின் சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக வெளிவந்தன.

விருதுகள்

  • இரண்டாம் சிறுகதைத் தொகுதி திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றிருக்கிறது.
  • தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது
  • இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.

நூல்கள்

  • நரசய்யா சிறுகதைகள் (1997)
  • கடல்வழி வணிகம் (2005)
  • தீர்க்க ரேகைகள் (2003)
  • சொல்லொணாப்பேறு (2004)
  • ஆலவாய் (2009)
  • கடலோடி (2004)
  • மதராசபட்டினம் (2006)
  • துறைமுக வெற்றிச் சாதனை (2007)
  • கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009)

உசாத்துணை