being created

திருஞான சம்பந்தர்

From Tamil Wiki
Revision as of 12:49, 21 April 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருஞான சம்பந்தர்,  சோழநாட்டின் சீர்காழியில, சிவபக்தரும் அந்தணருமான சிவபாத இருதயர்-பகவதி இணையருக்குப் பிறந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

ஞானப் பால் உண்டமை

சம்பந்தருக்கு மூன்று வயதானபோது நீராடுவதற்காகச் சென்ற தந்தை, சம்பந்தரை குளக்கரையில் அமர வைத்துவிட்டு, தான் குளத்தில் மூழ்கி நீராடினார். நீருக்குள் மூழ்கி இருந்த தந்தையைக் காணாமல் திகைத்த குழந்தை, திருத்தோணி அப்பர் ஆலயத்து கோபுரத்தைப் பார்த்து ‘அம்மா, அப்பா’ என்று அழுதது.

அது பொறுக்காத சிவபெருமான், உமையம்மையுடன் அங்கே தோன்றினார். உமையிடம், அழும் குழந்தைக்குப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்டும்படிப் பணித்தார். அவ்வாறே அன்னையும் அமுதூட்டினார்.

பாலை உண்ட குழந்தை பசி நீங்கியது. அழுகையை நிறுத்தியது. மலர்ந்த முகத்துடன் சிரித்தது. உடன் இறைவனும், இறைவியும் மறைந்தனர்.

கரையேறிய சிவபாத இருதயர், வாயில் பால் வழிய நின்று கொண்டிருந்த குழந்தையைக் கண்டார். ‘யார் பாலை நீ உண்டாய்?’ என்று அதட்டினார். உடன் குழந்தையான சம்பந்தர், வானைக் காட்டி,

தோடுடைய செவியன் விடைஏறி ஓர் தூ வெண் மதி சூடி

காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

என்று பாடினார். தனக்குப் பால் புகட்டிய அன்னையைப் பற்றிப் பாடாமல், அந்த அன்னைக்குத் தன்னுள் இடப்பாகம் தந்தருளிய, தனக்குப் பாலை வழங்குமாறு தாயிடம் பரிந்துரைத்த ஞானத் தந்தையைப் பற்றிப் பாடினார். உலகத்திற்குத் தாயும், தந்தையுமான பார்வதி - பரமேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்டதால், அன்று முதல் அவர், ஆளுடையப் பிள்ளை ஆனார். அன்னையின் ஞானப்பால் உண்டதால் ஞானசம்பந்தர் ஆனார்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.