being created

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்

From Tamil Wiki
Revision as of 05:43, 12 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் (டிசம்பர் 01, 1870 - ஏப்ரல் 06, 1920) தொல்காப்பிய ஆய்வாளர்களைப் பேணிய புரவலர், சமூக சேவகர்,

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஹரித்துவாரமங்கலத்தில் வாசுதேவ ராஜாளியார் - ஆயி அம்மாள் தம்பதியருக்குக் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் டிசம்பர் 01, 1870இல் பிறந்தார்.

கல்வி

பச்சைக்கோட்டையில் விஞ்சிராயரிடம் எட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வியைப் பயின்றார். மெட்ரிகுலேசன் படிப்பைக் கும்பகோணத்தில் முடித்தார். தஞ்சை எஸ்.பி.ஜி. கல்லூரியில் சேர்ந்து சிலகாலம் படித்தார்.

பொதுவாழ்க்கை

இவர் ஹரித்துவாரமங்கலத்தில் சித்த மருத்துவமனையையும் பள்ளிக்கூடத்தையும் நிறுனார். ஏழை, எளிய மக்களுக்கள் இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்தார்.

‘குற்றப்பரம்பரை’ சட்டத்தை நீக்க வேண்டும் என்பதற்காக டெல்லி சென்று அங்கு நடைபெற்ற முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடமும் ராணியாரிடத்தும் கோரிக்கை வைத்தார். தஞ்சைப் பகுதி ஈசநாட்டுக் கள்ளர்களை இந்தச் சட்டத்திலிருந்து காத்தார்.


[[Category:Tamil Content]]