being created

அபிராமிபட்டர்

From Tamil Wiki

அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்; பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) சரபோஜி மன்னரின் காலத்தில் வாழ்ந்த புலவர். சாக்த வழிபாட்டாளர். அபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம் ஆகியவற்றை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அபிராமி பட்டரின் இயற்பெயர் சுப்பிரமணியன். தஞ்சைக்கருகில் உள்ள திருக்கடையூரில் 19-ஆம் நூற்றாண்டில் அமிர்தலிங்க ஐயரின் மகனாகப் பிறந்தார். அவரது குடும்பம் தலைமுறைகளாக தேவி உபாசனையிலும், இசையிலும் ஈடுபட்டு வந்தது. அபிராமி பட்டர் தமிழும், சமஸ்கிருதமும், இசையும் கற்று அவற்றில் தேர்ச்சி பெற்றார். திருக்கடையூரில் கோவில் கொண்ட அபிராமி அம்மையின் மேல் பக்தி கொண்டு சாக்த யோக முறைப்படி வழிபாடு செய்துவந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம் ஆகிய நூல்களை இயற்றினார். அபிராமி அந்தாதி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்த பாடலின் முதலாக அமையும் அந்தாதியாக அமைந்த நூல். ஆற்ரொழுக்கான நடையில் பக்திச் சுவையுடனும் உருக்கத்துடனும் அமைந்தது. சக்தியின் திருவுருவத்தையும்,



அபிராமி அந்தாதி இயற்றியது பற்றிய தொன்மக் கதை

அபிராமி பட்டரை தேவி உபாசனையிலும் பக்தியிலும் தியானத்திலும் ஈடுபட்டு தன்னிலை மறந்த நிலையில் கண்ட மக்கள் அவரைப் பித்துப் பிடித்தவராகவும், தீயதேவதைகளை வழிபடுபவராகவும் கருதினர். தை மாதக் கருநிலவு(அமாவாசை) அபிராமியை வழிபட வந்த சரபோஜி மன்னர் தன் வருகையை அறியாமல் தியானத்தில் மூழ்கியிருந்தவரைப் பற்றிக் கேட்டறிந்தார். அவரைச் சோதிக்க வேண்டி 'இன்று என்ன திதி' என்று கேட்டபோது வழிபாட்டில் மூழ்கியிருந்த பட்டர் 'இன்று பௌர்ணமி' என்று பதில் சொன்னார்.

அபிராமி பட்டர் வாய் தவறி பக்தி மயக்கத்தில் திதியை மற்றிக் கூறியதற்காக மனம் வருந்தி அம்பிகையின் ஆலயத்தில் அரிகண்டம் ஏறினார். அன்னை தனக்கு ஏற்பட்ட பழியை மாற்றாவிடில் தீயில் விழுந்து உயிர்விடுவதாக உறுதி கொண்டு தரையில் தீமூட்டி, அதற்கு மேலே விட்டத்தில் நூறு கயிறுகளால் கட்டப்பட்ட உரியில் அமர்ந்து பாடல்கள் பாடி, ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக் கொண்டு வந்தார். 'உதிக்கின்ற செங்கதிர் ' எனத் தொடங்கி அந்தாதியாகப் பாடல்கள் பாடினார். 'விழிக்கே அருளுண்டு' எனத் தொடங்கும் 79-ஆவது பாடல் பாடியதும் வானில் முழுநிலவு தோன்றியது. அபிராமி அன்னை தன் தொண்டனின் பக்தியை உணர்த்த தன் காதணியைக் கழற்றி வானில் வீசியதாகவும், அது நிலவாக ஒளிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அபிராமி பட்டர் மேலும் 21 பாடல்களைப் பாடி 100 பாடல்களுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். சரபோஜி மன்னர் அபிராமி பட்டருக்கு மானியங்கள் வழங்கினார்.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.