அணங்கு
அணங்கு (இதழ்) ()
வெளியீடு
ஜீன் - ஆகஸ்டு 06 இல் வெளிவந்திருக்கும் சிற்றிதழ், 'அணங்கு'-காலாண்டிதழ். இவ்விதழின் ஆசிரியர், மாலதி மைத்ரி. == "குடும்பத்தின் வயிற்றுப் பாட்டுக்காகப் பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்ட பெண்கள், விற்கப்பட்ட பெண்கள் என சமூகமே வித்தழைத்தின்ற மாடு மாதிரி நிலம் பாரித்து வீங்கிப்போய் உள்ளது. நிலத்தையும் நீரையும் தெய்வமாக வணங்குகிறவர்கள், அதனால்தான் விற்றுக்கொண்டிருக்கிறார்கள், பெண்ணையும் தெய்வமாக வணங்குபவர்கள் பெண்களையும் எல்லா சந்தையிலும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்...
பெண்ணியத்தை ஏற்காத மாற்று அரசியலோ மனித விடுதலை அரசியலோ ஒரு போதும் உருவாக முடியாது. சுதந்திரமான பயமற்ற பேச்சும் விவாதமுமே அதற்கான தொடக்கம்".
உள்ளடக்கம்
பெண்களுக்கான இதழ்கள் பல வந்துகொண்டிருந்தாலும் நவீன இலக்கியத்தில் பெண்ணிய படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்திருக்கிறது, 'அணங்கு', 64 பக்கங்களைக் கொண்ட இவ்விதழில் கதைகள், கட்டுரைகள், நூல்விமர்சனம், மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், நேர்காணல், கருத்தரங்கு குறித்த விவாதங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. பெண்ணியம், பெண்ணெழுத்து குறித்த சில எழுத்தாளர்களின் கருத்துகள் 'உதயம் நேர்காணல்கள்' தொகுப்பிலிருந்து சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இலக்கிய இடம்
உசாத்துணை
- அணங்கு - சிற்றிதழ் அறிமுகம் 47: andhimazhai
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.