first review completed

நாராயண தீட்சிதர்

From Tamil Wiki

நாராயண தீட்சிதர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ அடியார். நம்மாழ்வார் மீது பெரும் பற்று கொண்டிருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நவதிருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரையில் பிறந்தார். இவரது பிறப்பு இறப்பு வருடங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் அறியப்படவில்லை

தந்தையிடம் தமிழ்க்கல்வி கற்றார். தென்திருப்பேரைக்கு அருகில் உள்ள திருக்குருகூர் என்றழைக்கப்பட்ட ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் மீது பக்தி கொண்டிருந்தார். மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சியின் போது திருநெல்வேலியின் முக்கூடல் எனும் பகுதிக்கு வரி வசூலிக்கும் உரிமை கொண்டவராகவும், சேனாபதியாகவும் பணிபுரிந்த வடமலையப்ப பிள்ளையன் ஆதரவை பெற்றிருந்தார். தனது விளைநிலத்துக்கான வரி கட்ட இயலாததால், சிறையிலடைக்கப்பட்டு பின்னர் வடமலையப்ப பிள்ளையன் ஆதரவில் விடுதலை செய்யப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

வடமலையப்ப பிள்ளையன் முன்னிலையில், தென்திருப்பேரையில் கோயில் கொண்டுள்ள மகரநெடுங்குழைக்காதரை பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு மகரநெடுங்குழைக்காதர் பாமாலை எனும் நூலை அரங்கேற்றினார். இந்நூல் 103 கட்டளைக்கலித்துறைப் பாக்களால் ஆனது. இந்நூல் மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் என்றும் வழங்கப்படுகிறது.

இவர் இயற்றிய பிற நூல்கள் கிடைக்கவில்லை

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.