கபிலர் விருது
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் கபிலர் விருதும் ஒன்று. இவ்விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
கபிலர் விருது
பழந்தமிழர், தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு போன்றவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் மரபுச் செய்யுள், கவிதைப் படைப்புகளை அளிக்கும் தமிழறிஞருக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் கபிலர் விருது வழங்கப்படுகிறது. 2012 முதல் வழங்கப்படும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும் பொன்னாடையும் கொண்டது.
கபிலர் விருது பெற்றோர் பட்டியல் - 2021 வரை
வ.எண். | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2012 | முனைவர் அ.அ. மணவாளன் |
2 | 2013 | கவிஞர் முத்துலிங்கம் |
3 | 2014 | முனைவர் ஆ. லலிதா சுந்தரம் |
4 | 2015 | கவிஞர் பிறைசூடன் |
5 | 2016 | முனைவர் எல்.கே. அக்னிபுத்திரன் |
6 | 2017 | முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் |
7 | 2018 | புலவர் மி. காசுமான் |
8 | 2019 | புலவர் வெற்றியழகன் |
9 | 2020 | செ. ஏழுமலை |
10 | 2021 | கருமலை தமிழாழன் |
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.