அபிநந்தநாதர் இக்ஷவாகு குலமன்னர் சன்வராவுக்கும் சித்தார்த்தாவுக்கும் மகனாக அயோத்தியில் மாசி வளர்பிறை 12-ஆம் நாள் பிறந்தார். ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் வைகாசி வளர்பிறை 6-ஆம் நாள்மோட்சம் அடைந்தார். இவர் ஐம்பது லட்சம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், 350 வில் (1050 மீட்டர்) உயரம் இருந்ததாகவும் சமணர்கள் நம்புகின்றனர்.
அடையாளங்கள்
அபிநந்தநாதரின் பாதச்சுவடுகள்நிறம்: தங்கம்
மரம்: அரச மரம்
விலங்கு: குரங்கு
முதல் உணவு: மன்னர் இந்திரதத்தனால் வழங்கப்பட்ட கீர்.