சோழன் வென்ற கடாரம்
சோழன் வென்ற கடாரம் ( ) மலேசியத் தமிழர்களின் வரலாறு பற்றிய முதன்மை ஆவணநூல். தமிழக வரலாற்றை ஆய்வுசெய்வதிலும் புதிய வெளிச்சங்களை அளிப்பது. வீ. நடராஜன் இந்நூலின் ஆசிரியர். ஆங்கிலத்தில் இருந்து இதை ரெ.கார்த்திகேசு தமிழாக்கம் செய்தார்.
எழுத்து, வெளியீடு
மலேசிய வரலாற்றாசிரியர் வீ. நடராஜன் எழுதிய இந்நூல் .1967-ஆம் ஆண்டு மலாயா பல்கலைகழகத்தில் வரலாற்று துறையில் இறுதியாண்டு பயிலும்போது நடராஜன் பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த ஆய்வினை தமது இறுதியாண்டிற்கான ஆய்வுக்கட்டுரையாகத் தயாரித்துப் படைத்தார்.
நடராஜன் 2011-ஆம் ஆண்டு ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’ என்ற தலைப்பில் பூஜாங் பள்ளத்தாக்குப் பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’ என்ற நூல் ‘சோழன் வென்ற கடாரம்’ என்ற தலைப்பில் தமிழில் எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
உள்ளடக்கம்
சோழர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கடாரம் என்பது மலேசியாவிலுள்ள கெடா மாநிலம்தான் என்பதை மலேசியாவில் பூஜோங் பள்ளத்தாக்கில் கிடைத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவும் நூல் இது.