தி. த. கனகசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:24, 29 September 2022 by Jeyamohan (talk | contribs)
தி.தா.கனகசுந்தரம் பிள்ளை

தி.த. கனகசுந்தரம் பிள்ளை ( ) தமிழறிஞர், பதிப்பாசிரியர்.

பிறப்பு, கல்வி

திருகோணமலை தம்பிமுத்துப் பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை 1863 ஆவணி 24 ல் திருகோணமலை அரசூழியரான தம்பிமுத்துப்பிள்ளைக்கும் அம்மணி அம்மாளுக்கும் பிறந்தார். திருகோணமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரைவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். கனகசுந்தரம் பிள்ளை 1880 ஆம் ஆண்டில் சென்னைக்கு சென்று சூளையில் உள்ள செங்கல்வராய நாயகர் பாடசாலையில் சேர்ந்து பயின்றார். சென்னைப் பல்கலைக்கழக மத்திய பாடசாலைத் தேர்வில் தேறியபின் பச்சையப்பன் கல்லூரியில் எஃப்.ஏ தேர்வில் வென்று சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

முதல் தமிழ் சரித்திர நாவலை எழுதிய தி. த. சரவணமுத்துப் பிள்ளையின் தமையன்.

தனிவாழ்க்கை