ஆ. பாலசுந்தரம்
From Tamil Wiki
ஆ. பாலசுந்தரம் (பிறப்பு: 1952) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆ. பாலசுந்தரம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள பில்லாந்தால் கிராமத்தில் 1952-ல் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை பயின்றார். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் பார்ப்பார்.
கலை வாழ்க்கை
ஆ. பாலசுந்தரத்தின் வாத்தியார் வெங்கடேசன். ஸ்ரீ கண்ணபிரான் நாடக மன்றம் மற்றும் பிற குழுக்களிலும் கூத்து ஆடியுள்ளார். சிதம்பரம், சேலம், கொட்டியம்பாளையம், தருமபுரி, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் கூத்து ஆடினார்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்துக்கள்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2025, 17:22:57 IST