under review

மதுரைப் புல்லங் கண்ணனார்

From Tamil Wiki
Revision as of 01:04, 6 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

மதுரைப் புல்லங் கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரைப் புல்லங் கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைப் புல்லங் கண்ணனார் பாடிய பாடல் அகநானூறில் 161-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவன் பொருளீட்டுவதற்காக கடுமையான கானக வழியில் பிரிந்து செல்லவிருக்கிறான் என்பதறிந்த தலைவி கண்ணீர் சிந்துகிறாள். இதனை பார்த்த தோழி நடந்ததை தலைவனிடம் கூறுவதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பிடர்மயிர் சுருள்சுருளாக அமையபெற்றவர்கள் பாலை நிலத்தில் வசிக்கும் மறவர் குலத்து ஆடவர்.அவர்கள் பெரிய வில்களில் அம்புகளை அமைத்து பாலையின் வழியே பயணப்படும் ஆடவரை தாக்கி கொன்று கொள்ளையிட்டு செல்வர்.அவ்வாறு இறந்தவர்களின் பிணங்கள் கழுகுகளுக்கு உணவாகும். அப்படிப்பட்ட கொடிய பாதையில் பயணம் செய்தே பொருளீட்டி வரவேண்டும்.
  • கரிய கூந்தலையும் மாநிற உடலும் முலைகளில் அழகு தேமல் கொண்டவர் மகளிர். அவர்கள் காதுகளில் அழகிய அணிகலன்கள் அணிந்திருப்பர். அத்தகு மகளிர் ஆடவர் பிரிந்து செல்கையில் தம் முலைகளின் மேல் கண்ணீர் வழிந்து செல்லுமாறு நெடுநேரம் அழுவர்.
  • உவமைகள்: தலைவியின் கூந்தல் வண்டுகள் மொய்க்கும் கரும்பாகவும் அவளது கண்களின் இமையானது குளத்தில் மலர்ந்த நீலப்பூக்களின் இதழாகவும் கண்ணானது குளமாகவும் உவமிக்கப்பட்டன.

பாடல் நடை

அகநானூறு - 161
  • திணை: பாலை
  • துறை: பிரிவுணர்த்தியதோழி, தலைமகளதுவேறுபாடு கண்டு முன்னமேஉணர்ந்தாள் நம்பெருமாட்டியென்று தலைமகனைச்செலவு விலக்கியது.

வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி;
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்,
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய;
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:37:48 IST