being created

மருதன் இளநாகனார்

From Tamil Wiki

மருதன் இளநாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை என்னும் ஊர்க்குறிப்புடன் ‘மதுரை மருதன் இளநாகன்’, ‘மதுரை மருதன் இளநாகனார்’ என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மருதன் இளநாகனார் அகநானூற்றில் 23 பாடல்களும், குறுந்தொகையில் 4 பாடல்களும், புறநானூற்றில் 5 பாடல்களும், நற்றிணையில் 12 பாடல்களும் கலித்தொகையில் 35 பாடல்களும் பாடியுள்ளார்.

பாடல்கள்
  • புறநானூறு: 52, 55, 138, 139, 349
  • அகநானூறு: 34, 59, 77, 90, 104, 121, 131, 184, 193, 206, 220, 245, 255, 269, 283, 297, 312, 343, 358, 365, 368, 380, 387
  • நற்றிணை: 21, 39, 103, 194, 216, 283, 290, 302, 326, 341, 362, 392
  • குறுந்தொகை: 77, 160, 279, 367,
  • கலித்தொகை: மருதக் கலி (35 பாடல்கள்)

பாடல்வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு

வரலாற்று நிகழ்வுகள்: கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் போரிட்டு அழித்த நாட்டு மன்றத்தில் வல்லு விள்ளையாட்டு (52), அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்பதை உணர்ந்துகொள் என்று இவனுக்கு அறிவுரை கூறுகிறார் (55), பாணனை நாஞ்சில் வள்ளுவனிடம் ஆற்றுப்படுத்துகிறார் (138), வள்ளல் நாஞ்சில் வள்ளிவன் வேந்தர் பக்கம் நின்று போரிடுபவன் (139), மகட்பாற் காஞ்சி (மறவன் மகளை வேந்தன் பெண் கேட்டல்) (349)

அகநானூறு
  • வரலாற்று நிகழ்வுகள்: குடவோலை முறையில் தேர்தல் (77), குளிக்கும் மகளிர்க்குக் கண்ணன் சேலை தந்தது, முருகன் சூரபன்மனைக் கொன்றது (59), செல்லூர் கோசர் மகளை மணக்க விலை கேட்டல் (90), கன்றைக் காத்து மாண்டவனுக்கு நடுகல் (131), செல்லூரில் சிவன் கோயில் (220), கழுவுள் காமூரில் பூதச் சிலை (365), கொங்கு நாட்டில் உள்ளி விழா (368)
  • உவமை: புலத்தி துவைத்த ஆடை போல் தூய்மை (34), கரும்புத் தண்டு போல் அவளுக்குப் பல் (193), வழுதி கையில் இருக்கும் வேல் போல் வானம் மின்னுகிறது (312), கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து (343), யானை மேல் கொடி (358), நாவல் பழம் நீர்த்துறையில் விழுவது போல (380), ஒட்டகம் எலும்பு தின்னும் (245)
  • சங்ககால நிகழ்வுகள்: காதலிக்குப் பூ சூட்டல் (104), தலைவிக்கு உதவும் விறலி (206), பொருளீட்டக் கப்பலில் செல்லல் (255), கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் மனைவி பூ சூடிக்கொள்ள மாட்டாள் (269), தலைவியை வழியனுப்பும் தோழி (283), தலைவன் பிரியாவண்ணம் தோழி தடுத்து நிறுத்தல் (387)
குறுந்தொகை
  • செந்தலை அன்றில் (160), வழிப்போக்கர் இட்ட பந்தல் யானைக்கு நிழல் (77), எருமை கழுத்தில் மணி (279)
நற்றிணை
  • உவமை: உருகும் நெய்யைப் பதம் பார்க்கப் பாலைத் தெளிக்கும்போது கேட்கும் ஒலி போல் (21), புலியைக் குத்தி விளையாடிய யானைக்கொம்பு போன்ற கண் கொண்டவள் (39), கண்ணில் தூசி விழுந்தால் கை உதவுவது போல (216), நாள் தவறாத ஞாயிறு போல, சொல் தவறாதவன் (283)
  • நிகழ்வுகள்: திருமணம் செய்துகொள்ள அவன் குதிரையில் வருகிளான் (163), ஆடு புலி விளையாட்டு (341), நீ தம்பலப் பூச்சியைப் பார்த்து விளையாடிக்கொண்டிரு (362), கடலுக்குச் செல்லும் தந்தை தன்னைப் கூட்டிச்செல்லவில்லை சிறுவன் அழுவான் (392)
  • இயற்கைப் படிமம்: பசு உண்ட மிச்சிலை எருது மேயும் (290), தெறுழ் என்னும் மலர் நரைமுடி நிறத்தில் இருக்கும் (302), பலாப்பழத்துக்குப் பக்கத்தில் கொக்கு மீனை உண்ணும்போது வீசும் முடைநாற்றத்தால் மந்தி தும்மும் (326)

பாடல் நடை

புறநானூறு
அகநானூறு
குறுந்தொகை
நற்றிணை

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.