under review

வெளிப்பட இரத்தல்

From Tamil Wiki
Revision as of 18:55, 31 July 2025 by Logamadevi (talk | contribs)

வெளிப்பட இரத்தல் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. தான் கண்டு காதலுற்ற பெண்ணிடம் தன் துன்பம் வெளிப்பட (காதலை) இரக்கும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அழகிய தழையாடையை அணிந்த அல்குலை உடையாளுடன் கூட இயலாத மிகுந்த வருத்தம் புலப்படக் காதலை இரத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அம்தழை அல்குல் அணிநலம் புணரா
வெம்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று(கொளு 14.9)

வெண்பா

உரஒலி முந்நீர் உலாய் நிமிர்ந்தன்ன
கரவரு காமம் கனற்ற - இரவு எதிர
முள் எயிறு இலங்கு முகிழ் நகை
வெள்வளை நல்காள் விடும் என்உயிரே (293)

பொருள்: ஆரவாரத்தையுடைய கடலையும் தாண்டுமளவு பரந்த என் காதல் துயரம் பெருக, முட்போன்ற பற்களில் புன்சிரிப்பையும் வளையலையும் கொண்ட அவளிடம் இரக்க, அவள் ஏற்கவில்லை. எனவே, என்னுடைய உயிர் நீங்கும்.

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page