being created

தொகை நிலை(தும்பை)

From Tamil Wiki
Revision as of 08:49, 18 June 2025 by Jayashree (talk | contribs) (Created page with "தொகை நிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்ட இரு தரப்பும் மொத்தமாக அழியும் நிலை என்பது பொருள்.தொகைநிலை என்னும் துறை உழிஞைப் படலத்திலும் உள்ளது. ==விளக்கம்== ======புறப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தொகை நிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்ட இரு தரப்பும் மொத்தமாக அழியும் நிலை என்பது பொருள்.தொகைநிலை என்னும் துறை உழிஞைப் படலத்திலும் உள்ளது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அறியாதபடி தமது புகழை உலகில் நிலைநிறுத்திப் போரிட்ட இரு பெரும் வேந்தரும், படைஞரும் ஒருவர் எஞ்சாமல் மடிந்தது தொலைநிலை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அழிவு இன்று புகழ்நிறீஇ
ஒரழிவுஇன்று களத்துஒழிந்தன்று- (கொளு-28)

வெண்பா

மண்டமர்த் திண்தோள் மறங்கடைஇ மண்புலம்பக்
கண்திரள்வேல் மன்னர் களம்பட்டார் - பெண்டிர்
கடிதெழு செந்தீக் கழுமினார் இன்னும்
கொடிதேகாண் ஆர்ந்தின்று கூற்று.

தமது தோள் வலிமையைப் புலப்படுத்திப் பகை மன்னர் இருவரும் உலகத்தை ஆள ஆளில்லாத வகையில் மடிந்தனர். அவருடைய மனைவியரும் தீப்பாய்ந்தனர். இப்படியாயினும் இன்னும் கூற்றின் வயிறு நிரம்பவில்லை. கொடியதே கூற்று. தொகை நிலை என்பது தும்பைப் போரின் உச்சம். மொத்தமாக அழியும் அவலம் இதில் உணர்த்தப்படுகிறது.

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.