being created

இறையருள் மாலை

From Tamil Wiki
Revision as of 20:22, 12 May 2025 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இறையருள்  மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்.

வெளியீடு

இறையருள் மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய ‘பாமாலை – 18’ என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. இறையருள் மாலை நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

இறையருள் மாலை நூலில் பல்வேறு உட்த்தலைப்புகளுடன் 736 கண்ணிகள் இடம்பெற்றன. பின்வரும் தலைப்புகளில் பாடல்கள் இடம்பெற்றன.

  • திறப்பு
  • அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைவனின் திருப்பெயர்கள்)
  • நபிமார் முதலியோர்
  • அமரர்கள்
  • நபிமார் பிராட்டியார்கள், குடும்பத்தினர்
  • நாயகத் தோழர்கள்
  • மெய்ஞான மேதைகள்
  • பல்துறை வல்லார்
  • இமாம்கள் (மார்க அறிஞர்கள்)
  • அருள்மறை அறிஞர்
  • நபிமொழி திரட்டியோர்
  • கவிஞர், அறிஞர், திறனாளர்
  • மறைநெறி பரப்பிய இறைநேயர்
  • இலங்கை முதலிய தீவுகளின் இறைநேயர்
  • இந்திய நாட்டின் இறைநேயர்
  • கேரளத்தின் இறைநேயர்
  • தமிழ்நாட்டின் இறைநேயர்
  • இறை புகழ்
  • இறைஞ்சுதல்

உள்ளடக்கம்

திறப்பு

இத்தலைப்பில், எட்டுச் சீர்கள் கொண்ட ஏழு கண்ணிகளாக, கடவுள் வாழ்த்துபோல் ஏழு பாடல்கள் இடம்பெற்றன.

அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைவனின் திருப்பெயர்கள்)

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள 99 இறைவனின் திருப்பெயர்கள், எட்டுச் சீர்களைக் கொண்ட 100 கண்ணிகளில் இப்பகுதியில் இடம்பெற்றன. அத்திருப்பெயர்கள், அரபுத் தமிழில், வரிசை முறையாக, எல்லோரும் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன, இறைவனின் பெயர்களனைத்தும் அவனின் பண்புகளை உணர்த்துவதாக விரிவான பொருளுடன் விளக்கப்பட்டுள்ளது.

நபிமார் முதலியோர்

இறைவன் மனிதர்களை நெறிப்படுத்த, மனிதர்களில் ஒருவரைத் தனது தூதராகத் தேர்வு செய்துக் காலச்சூழலுக்கு ஏற்ப அனுப்பினான். அந்நபிமார்களின் பெயர்களை, வரிசை முறைப்படி, இறையருள் மாலையின் இப்பகுதியில் இடம்பெற்றன. திருமறையில் இடம்பெற்ற இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களுடன், இரண்டு நல்லடியார்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு, நான்கு சீர்கள் கொண்ட 27 கண்ணிகளாக இப்பகுதியில் இடம்பெற்றன.

அமரர்கள் (வானவர்கள்)

இறைவன் தனது செய்தியை வானவர்கள் மூலம் நபிமார்களுக்கு (இறைத்தூதர்) அருளினான். ஜிப்ரயீல் மூலமாக இறைவசனங்கள் நபிகளாருக்கு வழங்கப்பட்டன. மழைக்கு அதிபதியாக விளங்கும் மீகாயில், உயிர்களைக் கைப்பற்றும் இசுராயீல், சுவனம், நரகம் இரண்டையும் காவல்காக்கும் மாலிக், ரிள்வான், நன்மை, தீமைகளைக் கணக்கிடும் அதிப், ரகீப்,  உடல் மடிந்தவுடன் மண்ணறையில் கேள்வி எழுப்பும் முன்கர், நக்கீரின் பணிகள் எட்டுச் சீர்கள் கொண்ட ஏழு கண்ணிகளில் இப்பகுதியில் விளக்கப்பட்டன.

நபிமார் பிராட்டியார், குடும்பத்தினர்

நபிமார்களின் தாயார்கள், மனைவிகள், பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இப்பகுதியில் எட்டு சீர்கள் கொண்ட 13 கண்ணிகளில் இடம்பெற்றன. நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் கதிஜா, ஆயிஷா, ஹஃப்ஸா, உம்முஸல்மா, ஸஃப்யா, ஸவ்தா, ஜைனப், ஜுவைரிய்யா, ஹபீபா மற்றும் மைமூனா என்றும், பிள்ளைகள் அபுல் காசிம், அப்துல்லாஹ், இப்ராஹீம், உம்முகுல்தூம், ஜைனப், ருகையா மற்றும் பாத்திமா என்றும், பேரன்கள் ஹஸன் மற்றும் ஹுஸன் என்பதுமான செய்திகள் இப்பகுதியில் இடம்பெற்றன.

நாயகத் தோழர்கள்

இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு உதவிய நபிகள் நாயகத்தின் தோழர்கள் பற்றிய செய்திகள் எட்டு சீர்களைக் கொண்ட 40 கண்ணிகளில் இடம்பெற்றன. நாயகத்தின் தோழர்கள் பலர் இருந்தும், அபுபக்கர் சித்தீக், உமர் பாரூக், உதுமானார் மற்றும் அலியார் ஆகியோர் மட்டுமே இப்பகுதியில் இடம்பெற்றனர். மேற்கண்ட நான்கு பேர்களும் நபிகள் நாயகத்தின் ஆட்சிக்குப் பிறகு கலிபாவாகப் பொறுப்பேற்று இஸ்லாத்திற்கு ஆற்றிய அரிய பங்களிப்பைப் போற்றும் வகையில் அவர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றன.

மெய்ஞான மேதைகள்

இறையருள் பெற்ற இஸ்லாமிய இறைநேசச் செல்வர்களான முஹ்யித்தீன் ஆண்டகை, ரிபாயீ, ஷாதிலீ, ஷெய்குல் அக்பர் போன்றோர் தொடங்கி பக்தாத் அப்துல் லத்தீப், ராஜஸ்தான் நாகூர் இன்ஹமீதுத்தீன் உள்ளிட்டோரின் வாழ்க்கை, பெருமை, சிறப்பு, மேன்மைகள் இப்பகுதியில் எட்டு சீர்கள் கொண்ட 45 கண்ணிகளாக இடம்பெற்றன.

பல்துறை வல்லார்
இமாம்கள் (மார்க அறிஞர்கள்)
அருள்மறை அறிஞர்
நபிமொழி திரட்டியோர்
கவிஞர், அறிஞர், திறனாளர்
மறைநெறி பரப்பிய இறைநேயர்
இலங்கை முதலிய தீவுகளின் இறைநேயர்
இந்திய நாட்டின் இறைநேயர்
கேரளத்தின் இறைநேயர்
தமிழ்நாட்டின் இறைநேயர்
இறை புகழ்
இறைஞ்சுதல்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.