under review

சொரூபசாரம்

From Tamil Wiki
Revision as of 10:04, 22 February 2025 by Logamadevi (talk | contribs)
சொரூபசாரம்

சொரூபசாரம் (பொ.யு. 15-ம் நூற்றாண்டு) சொரூபானந்தர் எழுதிய நூலாகக் கருதப்படுகிறது.

நூல் பற்றி

நூலின் ஆசிரியர் தத்துவராயரின் ஆசிரியரான சொரூபானந்தர். 1900-ல் இரண்டாம் பதிப்பு சென்னை ரிப்பன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளால் உரை செய்யப்பட்டது. நூறு வெண்பாக்கள் அடங்கிய நூல்.

விவாதம்

சொரூபானந்தர் எந்த நூலும் செய்யவில்லை. தம் மாணாக்கர் தத்துவராயரைக் கொண்டே பல நூல்களை உருவாக்கினார். எனவே இந்த நூல் சொருபானந்தரால் செய்யப்படவில்லை என்பது தமிழறிஞர் மு. அருணாசலத்தின் கருத்து.

பாடல் நடை

திருகாலஞானம் மெய்யுணர்வெனப்படாதோ என்ற கேள்விக்கு இக்கவியின் பதிலாக இப்பாடல் உள்ளது.

நேற்றினது நாளையென நிச்சயித்த ராப்பகலை
மாற்றிசுயஞ் சோதி வடிவாகி - யேற்றபடி
யென்றுமொரு நாளா விருக்குந் திருநாளைச்
சென் றுதொழு வாரே சிவம்.

மகான்களது சிந்தயினைப் பற்றி கூறும் பாடல்

எல்லா விடத்து மெமைக்கண்டோ மெம்மிடத்தி
லெல்லாமுங் கண்டோமென றேகமாக - கல்லாழை
கற்ற வனுபூதி கைகண்டார் மற்றேது
மற்றார்சீ வன்முத்த ராம்

இணைப்புகள்

‎


✅Finalised Page