ஏ. கே. செட்டியார்
From Tamil Wiki
ஏ. கே. செட்டியார் (ஏ. கருப்பன் செட்டியார்; பிறப்பு: நவம்பர் 3, 1911; இறப்பு: செப்டம்பர் 10, 1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படங்கள் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். காந்தி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்தவர். ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று போற்றப்பட்டவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘குமரி மலர்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்.
பிறப்பு, கல்வி
ஏ. கருப்பன் செட்டியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஏ. கே. செட்டியார், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் நவம்பர் 3, 1911-ல் பிறந்தார். அவரது இளமைப்பருவம் செட்டிநாட்டிலும் திருவண்ணாமலையிலும் கழிந்தது. பள்ளிப்படிப்பை திருவண்ணாமலையில் நிறைவு செய்தார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.