under review

இசபெல்லா கால்டுவெல்

From Tamil Wiki
Revision as of 01:03, 9 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text; ; Added info on Finalised date)
இசபெல்லா
குடும்பம்
வியாட்டுடன்

இசபெல்லா கால்டுவெல் (Eliza Isabella Caldwell) (1848 - 1933) கால்டுவெல்லின் மூத்த மகள். இறைப்பணியாளர், கல்வியாளர். இசபெல்லா வியாட் என்றும் அழைக்கப்படுகிறார். இறைப்பணியாளர் வியாட்டை மணந்தார்.

பிறப்பு கல்வி

இசபெல்லா கால்டுவெல் மதப்பணியாளரும் ஆய்வாளருமான கால்டுவெல் மற்றும் எலிசா மால்ட் இணையருக்கு இடையன்குடியில் 1848ல் பிறந்தார். லண்டனில் லண்டன் மிஷன் கல்விநிலையத்தில் பயின்றார்.

தனிவாழ்க்கை

இசபெல்லா ஜோசப் வியாட் என்னும் மதப்பணியாளரை 1868ல் இடையன்குடியில் மணந்தார். அவர்களுக்கு மூன்று மகள்கள். மேபல், லிலியன், பௌலின். இரண்டு மகன்கள் ஏர்னஸ்ட் , ஃப்ராங்க்.

மதப்பணிகள்

இசபெல்லா வியாட்டுடன் இணைந்து இடையன்குடி, திருச்சி, உறையூர் ஆகிய ஊர்களில் கல்விப்பணியும் மதப்பணியும் புரிந்தார்.

1895-ல் வியாட் எஸ்.பி.ஜி அமைப்பில் இருந்து ராஜினாமா செய்தார். 1899-ல் அவர் லண்டனில் பிராண்டன் (சஃபோக்) என்னும் ஊரில் ஆலயப் பணியாளராக 18 ஆண்டுகள் பணியாற்றினார். இசபெல்லா அவருடன் இருந்தார்.

மறைவு

இசபெல்லா பிராண்டன் சஃபொக்கில் 1933-ல் மறைந்தார்

வரலாற்று இடம்

இசபெல்லா தன் தந்தை கால்டுவெல் விட்டுச்சென்ற மதப்பணி, கல்விப்பணிகளை முன்னெடுத்தவர்.

உசாத்துணை

https://www.britishempire.co.uk/article/faithandfamily/allsaints.htm


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2024, 17:47:22 IST