மணிகண்ணன் (தெருக்கூத்து)
From Tamil Wiki
மணிகண்ணன் (பிறப்பு:1944) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார். தெற்கத்தி பாணி கூத்துக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
மணிகண்ணன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முன்னூரில் 1944-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் பார்ப்பார்.
கலை வாழ்க்கை
மணிகண்ணனின் வாத்தியார் வீடூர் செல்வராஜ். பாரத தேவி நாடக சபாவில் கூத்து ஆடினார். முதல் தலைமுறை கூத்துக் கலைஞர். கோவில் திருவிழாக்கள், குடும்பச்சடங்கு நிகழ்வுகளில் கூத்து ஆடினார்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்துக்கள்
- ராமாயணம்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.