பிறிதுமொழிதலணி (பிறிது மொழிதல் அணி)
From Tamil Wiki
Revision as of 08:39, 24 June 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பிறிது மொழிதல் அணி என்பது தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றை ஏற்றிக் கூறுதல். கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் கொள்ளுமாறு வேறொன்றைக் கூ...")
பிறிது மொழிதல் அணி என்பது தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றை ஏற்றிக் கூறுதல். கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் கொள்ளுமாறு வேறொன்றைக் கூறல். புலவர் தான் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல் அதனை ஒத்த பிறிதொன்றினைச் சொல்வது.