ஈஞ்சன் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 20:24, 14 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஈஞ்சன் கூட்டம் :கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலக்குழுக்களில் ஒன்று. ஈஞ்சை என்பது முள்கொடி போன்ற ஒரு வரண்டநிலத் தாவரம். இதன் பட்டையை உடலில் தேய்த்து குளிப்பதுண்டு. இந்த கொடிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஈஞ்சன் கூட்டம் :கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலக்குழுக்களில் ஒன்று. ஈஞ்சை என்பது முள்கொடி போன்ற ஒரு வரண்டநிலத் தாவரம். இதன் பட்டையை உடலில் தேய்த்து குளிப்பதுண்டு. இந்த கொடியை குலக்குறியாகக் கொண்டவர்களாக இருக்கலாம்

வரலாறு

ஈங்கூர் ஈஞ்சன்கூட்டத்தினரின் முதன்மை இடம் . தம்பிரான் பட்டியம்மன், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும் ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாக உள்ளனர். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர், கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் ஆகியவை பிற காணியிடங்கள்.

உசாத்துணை