அழகர் அந்தாதி
அழகர் அந்தாதி பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் அஷ்ட பிரபந்த நூல்களில் ஒன்று.
ஆசிரியர்
அழகர் அந்தாதியை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
நூல் அமைப்பு
இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியையும், சிறுபான்மை யமகம் என்னுஞ் சொல்லணியையும் உடையன. திரிபாவது - ஒவ்வோரடியிலும் முதலெழுத்துமாத்திரம் வேறு பட்டிருக்க. இரண்டுமுதலிய பல எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறு படுவது; இதனையும் யமகவகையில் அடக்குவர் ஒருசாரார். யமகமாவது - பலஅடிகளிலாயினும் ஓரடியிற்பலஇடங்களிலாயினும் வந்த எழுத்துத் தொடர்களே மீண்டுவந்து பொருள்வேறுபடுவது; இது, தமிழில் 'மடக்கு' எனப்படும். இந்நூற்செய்யுள்களிற் சிறுபான்மை காணப்படுகிற யமகங்கள், பலஅடிகளில் வந்தவை.
பாடல் நடை
நீராழிவண்ணனைப்பாலாழிநாதனை நின்மலனைச்
சீராழியங்கைத்திருமகள்கேள்வனைத் தெய்வப்புள்ளூர்
கூராழிமாயனை மாலலங்காரனைக் கொற்றவெய்யோ
னோராழித்தேர்மறைத்தானை யெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே.(1)
மாணிக்கனகம்புரைமேனிமாலுக்கு வார்சடையோன்
பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப் பச்சைத்துழா
யாணிக்கனகமுடியலங்காரனுக் கண்டமெல்லாம்
பேணிக் கனகனுக்குப் பித்தரானவர்பித்தரன்றே.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.