கூத்தநூல்

From Tamil Wiki
Revision as of 12:05, 4 June 2022 by Jeyamohan (talk | contribs)
கூத்தநூல்

கூத்தநூல் (சாத்தனார்): இது சாத்தனார் என்னும் கவிஞர் எழுதிய நாடக இலக்கண நூல். இந்நூலை ஏட்டுச்சுவடியில் இருந்து உரையெழுதிப் பதிப்பித்தவர் ச.து.சு.யோகியார். இது சங்ககால நூல் என்னும் தரப்பு உண்டு. ஆனால் பிற்காலத்தைய நூல், பெரும்பாலும் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கூத்தநூல் என்னும் பெயரில் இன்னொரு நூல் உள்ளது. அதன் ஆசிரியர் கூத்தநூலார் என அழைக்கப்படுகிறார். அந்நூல் காலத்தால் இந்நூலுக்கு பழையது.


பார்க்க:கூத்தநூல் (கூத்தநூலார்)

பதிப்பு வரலாறு

ச.து.சு. யோகியார் 1968ல் கூத்தநூலின் ஏட்டுப்பிரதியை ஈரோட்டில் கண்டெடுத்தார். அவர் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் எழுத மகாவித்துவான் மே.வீ. வேணுகோபால பிள்ளை பதிப்பாசிரியராக அமைந்து இந்நூலை வெளியிட்டார்.