Tamil Wiki:மாதிரி பக்கம் - ஆலயம்
(எடுத்துக்காட்டு பார்க்க: திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில்)
- இதில் எவற்றுக்கு தகவல் இல்லையோ, அவற்றை குறிப்பிடவேண்டும்
- கலைச்சொற்களுக்கு அவற்றுக்கான பக்கங்களுக்கு லிங்க் அளிக்கப்பட வேண்டும்
- கூடுமானவரை அனைத்துக்கும் சான்றுகள் இருக்கவேண்டும்
- ஒட்டுமொத்தமான சான்றுகள் உசாத்துணையிலும், மற்ற தனிப்பட்ட வரிகளுக்கான சான்றுகள் அடிக்குறிப்பிலும் தரப்பட வேண்டும்
ஆலய அறிமுகம்
- பொதுவான அறிமுகம் - முதன்மை தெய்வம், இன்றைய நிலை போன்றவை
- முக்கியமான பண்பாட்டு வரலாற்று தகவல்கள்
- இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது பற்றிய தகவல்கள்
இடம்
- Geographical location, ஊர், வட்டாரம் போன்ற தகவல்கள்
கோயில் வரலாறு, பெயர்கள்
- எப்போது யாரால் கட்டப்பட்டது, விரிவாக்கம், மீளமைப்பு - போன்ற தகவல்கள்.
- கோயிலுக்கு வழங்கி வந்த பெயர்கள்
- வரலாற்றை சொல்லும்போது, நவீனகாலத்தில் இந்த வரலாற்றை தொகுத்தவர்கள் (எகா: குடவாயில், நாகசாமி போல) பெயரையும் குறிப்பிடலாம். பின்னர் தனி செக்ஷனில் அவர்கள் பங்களிப்பு பற்றி சொல்லவேண்டும்
கோயில் தெய்வங்கள்
- முதன்மை தெய்வங்கள், மற்ற சன்னிதிகள்
தலபுராணம் & ஆகமம்
- கோயிலுக்கு தொடர்புடைய தலபுராணம், தொன்மங்கள், கதைகள், அவை மாறி வந்த வரலாறு.
- கோயிலில் பின்பற்றப்படும் ஆகமம். அது வழக்கில் இல்லையென்றால், தற்கால பூஜை முறைகள் பற்றிய குறிப்பு
தொடர்பான விழாக்கள்
- கோயிலுக்கு தொடர்புள்ள முக்கிய விழாக்கள், அவை உருவாகி வந்த வரலாறு
கட்டிடக்கலை
- கோயில் அமைப்பு, கட்டுமானம், சிற்பம் பற்றிய விரிவான பகுதி.
- கருவறை, மண்டபங்கள், விமானங்கள், சுற்று, குளம், பரிவார ஆலயங்கள் போன்றவை. இவற்றுக்கு தனித்தனி பெயர்கள் இருந்தால் குறிப்பிடப்ப்ட வேண்டும்
- கட்டிட பாணி, சிற்ப பாணி
- அமைப்பின் தத்துவ குறியீடுகள்
மற்ற கலை வடிவங்கள்
- ஓவியங்கள் போன்றவை இருந்தால்
சிற்பங்கள் பட்டியல்
- கோயிலில் இருக்கும் சிற்பங்கள் பட்டியல்
இலக்கியம்
கோயில் தொடர்பாக எழுதப்பட்ட முக்கியமான மரபு நூல்கள். (ஆய்வுகளை இங்கே குறிப்பிட வேண்டாம்)
பண்பாட்டு முக்கியத்துவம்
- Cultural Significance, பண்பாட்டில் செலுத்திய தாக்கம்
- கோயிலில் இடம்பெற்ற பண்பாட்டு நிகழ்வுகள்
கல்வெட்டுகள்
கோயிலில் குறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், மற்றும் அங்கு கிடைத்த சாசனங்கள், ஆவணங்கள், நிவந்தங்கள் போன்றவை இங்கு தரப்பட வேண்டும்
- கோயிலில் 1-3 எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் இருந்தால், இந்த விவரங்களை அளிக்கவும்
(1) கல்வெட்டு வரிகள் (2) வரிகளின் பொருள் (3)கல்வெட்டு ஆண்டு, அமைத்தவர் விவரங்கள் (4) தொல்லியல் துறை கல்வெட்டு குறியீட்டு எண்
- 4-10 எண்ணிக்கையில் இருந்தால் இந்த விவரங்களை தரலாம். கல்வெட்டு வரிகள் தேவையில்லை
(1) கல்வெட்டு வரிகளின் பொருள் (2)கல்வெட்டு ஆண்டு, அமைத்தவர் விவரங்கள் (3) தொல்லியல் துறை கல்வெட்டு குறியீட்டு எண்
- 10க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால், கல்வெட்டுகள் பற்றிய விவரங்களை தொகுத்து அளிக்கவும். இக்கோயில் கல்வெட்டுத் தொகை பற்றி ஏதெனும் குறிப்பான நூல்கள், ஆய்வுகள் இருந்தால் அளிக்கவும். (இவற்றுள் மிக முக்கியமான 1-2 கல்வெட்டுக்களை பற்றிய விவரங்களை மட்டும் அளிக்கலாம்)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மாவட்ட வாரியாக, அதற்குள் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பட்டியல் வைத்துள்ளது. அது தவிர இந்திய அரசின் தொல்லியல் துறையின் ஆவணங்களும் உள்ளன.
ஒவ்வொரு கல்வெட்டுக்கும் இந்தக் குறியீட்டு எண்களை கட்டாயம் அளிக்கவேண்டும்,
குறிப்பு
தமிழ் இணையவெளியில், அரசு மற்றும் ஆர்வலர்கள் தனி முயற்சி மூலம் கல்வெட்டு ஆவணத் தொகுப்புகள் உருவாகிக் கொண்டுள்ளன. இவற்றை தொகுப்பவர்களுடன் சேர்ந்து பணியாற்றி ஒருமித்த வகையில் குறியீட்டு எண் அளிக்கும் திட்டம் உள்ளது. ஏற்கனவே எழுதிய பதிவுகளிலும் இவற்றை சரிபார்த்து சேர்க்க வேண்டியுள்ளது
இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, அதற்கான செயல்முறையும் இங்கே குறிக்கப்படும்
தொடர்புள்ள ஆளுமைகள் & ஆய்வுகள்
- கோயிலை கட்டுவித்த மன்னர்கள், மற்ற ஆளுமைகள்
- தொடர்புள்ள சிற்பிகள், ஓவியர்கள், கலைஞர்கள், பெயர் தெரிந்தால்
- கோயில் வரலாற்றை தொகுத்தவர்கள், நவீன கால பங்களிப்புகள், இவர்கள் எழுதிய நூல்கள், ஆய்வுகள்
உசாத்துணை
மொத்த கட்டுரைக்கு உதவிய நூல்கள், ஆவணங்கள்
அடிக்குறிப்புகள்
குறிப்பிட்ட வரிகளுக்கு சான்றாக விளங்கும் நூல்கள், இணையப் பதிவுகள்
வெளி இணைப்புகள்
கோயில் தொடர்பாக மற்றவர்கள் உருவாக்கிய முக்கிய கட்டுரைகள், காணொளிகள் போன்றவை