ஏ.கே. சுப்பிரமணியன்
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
ஏ.கே. சுப்பிரமணியன் (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், பாடகர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஏ.கே. சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்.
நாடக வாழ்க்கை
ஏ.கே. சுப்பிரமணியன் சங்கரதாஸ் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நாடக நடிகராக இருந்தார். சுவாமிகளின் கம்பெனி திண்டிவனத்தில் இருந்தபோது டி.ஆர். ராமகிருஷ்ணன் என்ற பாட்டா ராமகிருஷ்ணன் கம்பெனியை விட்டு விலகினார். அவர் இடத்தை ஏ.கே. சுப்பிரமணியன் பூர்த்தி செய்தார். வள்ளி நாடகத்தில் வேலன் - வேடன் - விருத்தன் முதலிய பாத்திரங்களில் ஏ.கே. சுப்பிரமணியன் பாடிய பாடல்கள் புகழ்பெற்றன. இவரின் இசைத்திறன் நடிகர்கள், மக்களின் பாராட்டைப் பெற்றது. காஞ்சிபுரத்தில் கம்பெனி இருந்தபோது ஏ.கே. சுப்பிரமணியன் கம்பெனியை விட்டு விலகினார்.
நடித்த நாடகங்கள்
- சத்தியவான் சாவித்ரி
- வள்ளி திருமணம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Aug-2024, 18:49:44 IST