இணைமணி மாலை
To read the article in English: Inaimanimaalai.
இணைமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இணைமணிமாலையின் இலக்கணம் தொடர்பாக பாட்டியல் நூல்களில் வேறுபாடுகள் இருக்கின்றன:
- வெண்பாவும் அகவலும் மாறிமாறி வர அந்தாதியாக அமையும் நூறு பாடல்கள் கொண்டதே இணைமணிமாலை என்று நவநீதப் பாட்டியல் குறிப்பிடுகிறது[1]
- வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கலித்துறை (பாவின வகை)யுமாக இரண்டிரண்டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணிமாலை, வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என நூறுநூறு அந்தாதித் தொடையாக வரப்பாடுவது இணைமணிமாலை என்று இலக்கண விளக்கம் குறிப்பிடுகிறது[2].
நல்லூர் முருகன் இணைமணிமாலை இலக்கண விளக்கத்தில் கூறியபடி அகவற்பா இல்லாமல் நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் இணைந்து அந்தாதியாக அமைந்துள்ளது.
நல்லூர் முருகன் இணைமணிமாலை
நேரிசை வெண்பா
ஏத்துவே னும்பாத மெண்னுவே னுன்கீர்த்தி
சாத்துவேன் பாமாலை சண்முகா-கூத்துப்
பலபுரியு நல்லூரா பாதமலர்த் தேனை
நிலவுகந்த் துய்க்கவருள் நீ
கட்டளைக் கலித்துறை
நீயே யிருக்குநல் லூரினிற் கோயிலை நீதிமன்னன்
தாயே யெனக்கட்டு வித்தும் புதுக்கியுன் தான்பணிந்தான்
சேயே முருகா சிவகுரிவேசெந் தமிழ் சொன்னவா
வாயேன் மனத்தினு நாவினும் வாழ்விலும் வந்தருளே
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:06 IST