கார்த்திகேயன் வாசகசாலை
கார்த்திகேயன் - வாசகசாலை (7 அக்டோபர் 1982) தமிழ் எழுத்தாளர், நவீன இலக்கியச் செயல்பாட்டாளர். வாசகசாலை என்னும் அமைப்பை உருவாக்கி வாசிப்பைப் பரவலாகக் கொண்டுசெல்லும்பொருட்டு பணியாற்றுபவர். வாசகசாலை என்னும் பதிப்பகத்தையும் புரவி என்னும் இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார்
பிறப்பு, கல்வி
கார்த்திகேயன் 07 அக்டோப1982 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் என்னும் ஊரில் வி.வெங்கட்ராமன், எஸ். கமலாதேவி.இணையருக்குப் பிறந்தார்.
கார்த்திகேயன் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (கோட்டைப்பட்டினம்) யின் ஆரம்பக்கல்வியையும் , கோட்டைப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் முடித்தபின் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி (திருப்புனவாசல்) அரசினர் மேல்நிலைப்பள்ளி (மணமேல்குடி) ஆகிய கல்விநிலையங்களில் 1998ல் பள்ளிக்கல்வியை நிறைவுசெய்தார். அய்யா வீரைய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (பூண்டி)யில் இளங்கலை இயற்பியலை 2002 ல் முடித்து விட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சிராப்பள்ளி) யில் முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் கல்வியை 2007ல் நிறைவுசெய்தார்
தனிவாழ்க்கை
கார்த்திகேயன் கீழ்க்கண்ட பணிகளை ஆற்றியுள்ளர்ார்
- ஆசிரியர் (கணிதம் & ஆங்கிலம்) - மகாத்மா நர்சரி பிரைமரி பள்ளி, மணமேல்குடி - 01/07/2002 முதல் 30/11/2002 வரை
- ஆசிரியர் (கணிதம், ஆங்கிலம் & கணிப்பொறியியல்) - சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி, யாகூப் ஹசன் பேட்டை - 01/12/2002 முதல் 31/07/2008 வரை
- நிறுவன கணக்கு வழக்குகளை கணினி மயமாக்குதல் - எஸ்.ஆர்.எம் ட்ரேடர்ஸ், மணமேல்குடி - 01/08/2008 முதல் 31/01/2009 வரை
- தரவு ஒருங்கிணைப்பாளர்-- அரோவா இன்பர்மேட்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சேலையூர், சென்னை - 4/3/2009 முதல் 30/11/2009 வரை
- மின்னூடக வணிகத்தொடர்பாளர் (இன்பவுண்ட்) - டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்காக - ஆண்ட்ரோமெடா மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், ஜாபர்கான்பேட்டை, சென்னை - 01/12/2009 முதல் 30/09/2010 வரை
- தொழில் ஆய்வு மேலாளர் - சன்சார் ரிசோர்சஸ் லிமிடெட், மயிலாப்பூர், சென்னை - 01/10/2010 முதல் 20/10/2013 வரை
- உதவி மேலாளர் - அம்பலம் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் பிரைவேட் லிமிடெட், பெசன்ட் நகர், சென்னை - 23/11/2013 முதல் 01/10/2015 வரை
- பயிற்சி உதவி ஆசிரியர்-- தினமலர் (நெல்லை குழுமம்) - தி நகர், சென்னை - 04/11/2015 முதல் 14/07/2016 வரை
- உள்ளடக்க ஆசிரியர் - தினமணி டாட் காம், அம்பத்தூர், சென்னை - 16/07/2016 முதல் 25/03/2021 வரை
- உள்ளடக்க நிர்வாகி - பிஞ்ச் தமிழ் ஆஃப் (Bynge Thamizh App) – [நோஷன் பிரஸ் குழுமம்] - 25/06/2021 - 31/03/2022 வரை
- ஆசிரியர், புரவி - கலை இலக்கிய மாத இதழ், வடபழனி, சென்னை - 01/04/2022 முதல் 28/02/2023 வரை
- சுதந்திர பணியாளர் (ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு) - குரோம்பேட்டை, சென்னை - 01/11/2023 முதல் தற்போது வரை
கார்த்திகேயனின் பெற்றோர் மறைந்துவிட்டனர். மணமாகவில்லை.
இலக்கியப் பணிகள்
கார்த்திகேயனின் தந்தை வெங்கட்ராமன் நல்ல வாசகர். ஓரிரு கதைகளையும் எழுதியவர். அவரிடமிருந்து இலக்கிய ஆர்வத்தை அடைந்தார். தந்தை அஞ்சலகத்தில் பணியாற்றியமையால் அங்கு வரும் இதழ்களைப் பயின்றார். இலக்கிய ஆர்வம் உருவாகவே தீவிர வாசகராக மாறினார்.
கார்த்திகேயன் 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முகநூல் வழியாக வாசிப்பார்வம் கொண்ட சில நண்பர்கள் மூலம் எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் தொடர்பைப் பெற்றார். அவர்களுடன் இணைந்து 2009-ஆம் ஆண்டு முகநூலில் 'எழுத்தாளர் சாரு நிவேதிதா வாசகர் வட்டம்' எனும் முகநூல் குழுவைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் சென்ற பின்பு அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, குழுவை முன்னின்று நடத்திய நண்பர்கள் பார்த்திபன் மற்றும் பாஸ்கர் ராஜா இருரும் விலகினர். அவர்களோடு சேர்ந்து வாசிப்பினை முன்வைப்பதற்காக 'வாசகசாலை' என்ற ஒன்றைத் தொடங்க முடிவெடுத்தார்கள்.
'வாசகசாலை' எனும் பெயரில் ஒரு முகநூல் குழு 15 ஆகஸ்ட் 2012 அன்று தொடங்கப்பட்டது. புத்தகங்கள் சார்ந்த ஆழமான கருத்து பரிமாற்றங்களுக்கான களமாகவும், வாசிப்பு ஆர்வம் கொண்ட நண்பர்கள் சந்திக்கும் தளமாகவும் அது அமைய வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம். இப்போது கார்த்திகேயன் அவர் நண்பர் அருண் இருவரும்தான் வாசகசாலையின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
அதன் பயனாக சென்னை திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில், மாதம் ஒரு கூட்டம் என்ற அடிப்படையில் வாசகசாலையின் முதல் கூட்டம், 14 டிசம்பர் 2014 அன்று எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி அவர்களின் '7.83 ஹெர்ட்ஸ்' எனும் அறிவியல் புனைவு நாவலுக்காக நடத்தப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சிறப்புத் தலைப்புகளில் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்..
3) இலக்கியம் சார்ந்த பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி, ஐந்து அமர்வுகளுடன் வாசகசாலை சார்பாக முதல் முழுநாள் நிகழ்வு. இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் மாலன், இமையம், த.அரவிந்தன், ஆர். அபிலாஷ், திலகபாமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்பதற்கான கட்டணம் ஏதுமில்லை. அதேசமயம் கலந்து கொண்ட பார்வையாள நண்பர்கள் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது வரை வாசகசாலையின் எல்லா முழுநாள் நிகழ்வுகளிலும் இதையே பின்பற்றி வருகிறோம். முழுநாள் நிகழ்வு நடைபெற்ற தேதி: 17/05/2015, பனுவல், திருவான்மியூர்.
4) நிறைய புதிய இளம் படைப்பாளிகளை கொண்டு வர வேண்டும்; அவர்களது படைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் வாசகசாலை என்னும் பெயரில் இணைய இதழ் துவங்கப்பட்டது. அதற்கான அறிமுக வரைவினை நண்பர் பாஸ்கர் ராஜாவுடன் சேர்ந்து உருவாக்கியவர் எழுத்தாளர் விஷால் ராஜா. முதலாவது இதழில் அப்போது அறிமுக எழுத்தாளரான தூயன் முதல் அறியப்பட்ட படைப்பாளியான யுவன் சந்திரசேகர் வரை அனைவரது பங்களிப்பும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இதழ் வெளியான தேதி: 16/10/2016
5) தங்களது படைப்பை அச்சில் காண வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ள எத்தனையோ இளம் படைப்பாளிகளுக்கு ஒரு களமாக அமைய வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் வாசகசாலை பதிப்பகம் துவங்கப்பட்டது. அதன் முதல் வெளியீடாக மறைந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷின் 'மிஷன் தெரு' குறுநாவல் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. வாசகசாலை முப்பெரும் விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் முதல் பிரதிதியை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வழியிட இயக்குனர் திரு பா.ரஞ்சித் பெற்றுக் கொண்டார். இதுவரைக்கும் 140-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்துள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை இளம் படைப்பாளிகளுடையவை என்பதும், பெரும்பாலோனருக்கு அதுதான் அவர்களது முதல் நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிப்பகம் தொடங்கப்பட்ட தேதி: 27/12/2016
(கடந்த 2019- ஆம் ஆண்டிலிருந்து சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கு அமைத்து கலந்து கொண்டு வருகிறோம். இவ்வாண்டு மயிலாடுதுறை மற்றும் ஈரோடு புத்தக கண்காட்சிளிலும் பங்கேற்றுள்ளோம்)
6) இலக்கியம் குறித்த விவாதங்களை ஒருங்கிணைப்பதற்காக வாசகசாலை என்ற பெயரில் செயல்படுவதைப் போல, திரைப்படங்கள் குறித்தும் அதனுடைய நீட்சிகளாக உள்ள மற்ற அம்சங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக 'திரைக்களம்' என்றொரு தனியான பிரிவு துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட நாள் - 22/05/2017
7) வாசகசாலையை ஓர் இலக்கிய அமைப்பாகத் தொடங்கிய நாள் முதல், வாசகசாலை பதிப்பகம் தொடங்கிய நாள் முதலாக, எப்போதும் மனதில் உள்ள ஓர் ஆசை வாசகசாலை சார்பாக ஒரு அச்சு இதழைக் கொண்டு வர வேண்டும் என்பதே. எத்தனையோ ஆண்டு கால கனவின் விளைவாக கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பாரம்பரிய அச்சுப் பத்திரிகைகளே பெரிய முடக்கத்தைச் சந்தித்திருந்த வேளையில் 'புரவி' என்னும் கலை இலக்கிய அச்சு இதழைக் கொண்டு வந்தோம். அதன் அட்டைப் படங்களுக்காகவும், திரளான அதன் உள்ளீட்டிற்காகவும், ஒவ்வொரு இதழிலும் வெளியாகும் ஆளுமைகளுடனான நேர்காணலிற்காகவும் வாசகர்கள் மத்தியில் அது பெரிய வரவேற்பினைப் பெற்றது. ஆனால், விளம்பர வருவாய் என்பது பெரிதாக இல்லாத காரணத்தினால் தொடர் நிதிச் சுமைகள் காரணமாக எங்களால் முடிந்த வரையில் இதழ்களைக் கொண்டு வந்தோம். தற்போது இதழ் வெளியாவதில்லை்
புரவி இதழ் வெளி வந்த காலம்: ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2022 வரை ( 21 இதழ்கள்)
* புரவியின் முதலாம் ஆண்டு சிறப்பிதழ் (ஏப்ரல் 2022) வழக்கத்தைவிட மிகக் கூடுதலான பக்கங்களுடன் தமிழில் முக்கியமான ஆளுமைகளின் பங்களிப்புடன் வெளியானது. புரவியின் ஆண்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வு நடைபெற்ற நாள்: 09/04/22.
விருதுகள்:
1) உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சிறந்த இணையதள விருது 2019 - வாசகசாலை இணையதளம்
2) படைப்பு இலக்கிய குழுமம் வழங்கும் சிறந்த இலக்கிய அமைப்பிற்கான விருது 2021 - வாசகசாலை இலக்கிய அமைப்பு (அன்புக்குரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் கையால் பெற்ற விருது)
இலக்கிய அமைப்புப் பணிகள்:
வாசகசாலை - சென்னை:
1) மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வுகள்:
டிசம்பர் 2014 முதல் அக்டோபர் 2023 வரை - 74 நிகழ்வுகள்
(இவற்றில் சில கூட்டங்கள் மட்டும் 'கிளாசிக் சீரிஸ்' என்று பெயரிடப்பட்டு தமிழின் மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக தஞ்சை ப்ரகாஷ் - ஜனவரி 2015, ப.சிங்காரம் - ஜூலை 2015, ராசேந்திர சோழன் - அக்டோபர் 2016)
2) முழுநாள் நிகழ்வுகள்: (ஆண்டிற்கு ஒருமுறை)
வாசகசாலை சார்பாக மட்டும்: 2015 - 2018 - 4 நிகழ்வுகள்
(கடந்த 2017-ஆம் ஆண்டு நிகழ்வானது மூத்த ஆளுமை எஸ்.வி.ராஜதுரை அவர்களை கவுரவிக்கும் பொருட்டு ‘எஸ்.வி.ஆர் படைப்புலகம்’ என்னும் பெயரில் 15/08/2017 அன்று நடைபெற்றது.)
திரைக்களம் சார்பாக மட்டும்: 2018 - 1 நிகழ்வு
வாசகசாலை & திரைக்களம் சேர்த்து: 2019 - 1 நிகழ்வு
3) கதையாடல்
(ஒவ்வொரு மாதமும் அச்சு மற்றும் இணைய இதழ்களில் இருந்து வெளியாகும் 5 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அந்த கதைகளைப் பற்றிய உரையாடல் நடத்தும் மாதாந்திர நிகழ்வு):
ஜூன் 2016 முதல் மார்ச் 2024 வரை - 81 நிகழ்வுகள்
4) சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் சேர்ந்து தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - பிரதி ஞாயிறு தோறும் மாலை நடைபெற்ற வாராந்திர நிகழ்வுகள்:
(2016-ஆம் ஆண்டின் இறுதியில் புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் 2017 ஆம் ஆண்டு தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டு என்று கூறியதை ஒட்டி எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பினைப் பயன்படுத்தி அதைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுத் தொடர் வரிசை)
25/02/2017 முதல் 15/09/2019 வரை - 128 நிகழ்வுகள்
(நூறாவது வார நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு தொடர்ந்து நூலகத்தில் நிகழ்வுகள் நடத்த இயலாததால் இதே நிகழ்வினை 'தமிழ் சிறுகதை கொண்டாட்டம்' என்ற பெயரில் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாசகசாலையின் முகநூல் பக்கத்தில் பிரதி ஞாயிறு மாலை 'பேஸ்புக் லைவ்' வழியாக நடத்தினோம்.
அதன்படி, 09/05/2020 முதல் 10/10/2021 வரை - 94 நிகழ்வுகள்
5) சென்னை அசோக் நகர் வட்டார நூலகத்துடன் இணைந்து பிரதி செவ்வாய் தோறும் மாலை வாராந்திர தொடர் நிகழ்வுகளை நடத்தினோம்.
முதலில் 'மனதில் நின்ற நாவல்கள்' என்ற பெயரில் 52 வாரங்களும், பிறகு அதே நிகழ்வு 'மனதில் நின்ற கவிதைகள்' என்ற பெயரில் 34 வாரங்களும் நடத்தப்பட்டது
18/04/2017 முதல் 08/01/2019 வரை 86 நிகழ்வுகள்.
அதற்குப் பிறகு தொடர்ந்து நூலகத்தில் நிகழ்வுகள் நடத்த இயலாததால் இதே நிகழ்வினை 'மனதில் நின்ற கவிதைகள்' என்ற பெயரில் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாசகசாலையின் முகநூல் பக்கத்தில் பிரதி செவ்வாய் மாலை 'பேஸ்புக் லைவ்' வழியாக நடத்தினோம்.
அதன்படி, 21/04/2020 முதல் 08/06/2021 வரை - 104 நிகழ்வுகள்
6) திரைக்களம் மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வுகள்
(மாதம் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையில் தமிழ் மட்டுமல்லாது இந்திய மற்றும் அந்நிய மொழித் திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல்)
22/05/2017 முதல் 07/04/24 வரை 60 நிகழ்வுகள்
7) திரைக்களம் வழங்கும் 'ஒளியும் ஒலியும்'
திரைப்படப் பாடல்களின் வழியாக நினைவுகளை மீட்டெடுக்கும் ஓர் இசைவெளிப் பயணமாக அமைந்த மாதாந்திர தொடர் நிகழ்வு வரிசை
03/11/2017 முதல் 29/04/23 வரை 38 நிகழ்வுகள்
8) வாசகசாலை வழங்கும் 'ஈழத் தமிழ் எழுத்தாளர் வரிசை' ஈழத்தைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்கள் பற்றிய தொடர் கலந்துரையாடல் நிகழ்வு வரிசை
27/08/2016 முதல் 26/02/23 வரை 14 நிகழ்வுகள்
9) ஆழ்வார்பேட்டை வட்டார நூலகத்துடன் வாசகசாலை இணைந்து வழங்கும் 'குழந்தைகளுக்கான கொண்டாட்டம்'
பிரதி ஞாயிறு காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குழந்தைகளுக்கான பல்வேறு செயல்பாடுகளை முன்னிறுத்திய வாராந்திர தொடர் நிகழ்வு வரிசை
28/10/18 முதல் 16/02/2020 வரை 61 நிகழ்வுகள்
10) பெரம்பூர் பெரியார் நகர் முழு நேர கிளை நூலகத்துடன் வாசகசாலை இணைந்து வழங்கும் 'வடசென்னையில் வாசகசாலை'
வடசென்னையில் அவ்வளவாக இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை என்ற கூற்றை புறந்தள்ளும் விதமாக பிரதி ஞாயிறு காலை 10:30 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற வாராந்திர நிகழ்வு தொடர்வரிசை
07/01/18 முதல் 26/08/2018 வரை 27 நிகழ்வுகள்
11) திரைக்களம் வழங்கும் 'இணைத்திரை'
திரைப்படத்திற்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் வலைத்தொடர்களை பற்றிய மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வு வரிசை.
21/07/2019 முதல் 13/04/24 வரை 22 நிகழ்வுகள்
12) திரைக்களம் வழங்கும் 'குறுந்திரை'
எதிர்கால திரைப்பட இயக்குநர்களை உருவாக்குவதற்கான ஆயத்த களமாக விளங்கும் குறும்படங்களைப் பற்றி திரையிடல் மற்றும் கலந்துரையாடல் அடிப்படையில் அமைந்த மாதாந்திர நிகழ்வு வரிசை
15/05/22 முதல் 27/08/23 வரை 12 நிகழ்வுகள்
13) வாசகசாலை வழங்கும் 'மேடை'
சமூகம் சார்ந்த நூல்களை கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நிகழ்வு வரிசை
29/06/19 முதல் 30/10/22 - 4 நிகழ்வுகள்
14) வாசகசாலை வழங்கும் 'முகங்கள்'
நமக்குத் தெரிந்த பல்துறை சார் ஆளுமைகளை இன்னும் நெருக்கமாக உணரவும், நமக்கு அறிமுகமே இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்கான உழைப்பை நல்கி வரும் ஆளுமைகளை அறிமுகம் செய்வதற்குமான மாதாந்திர நிகழ்வு வரிசை
11/10/19 முதல் 16/09/23 வரை 16 நிகழ்வுகள்
15) பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சிறுகதை கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம்.
நிகழ்வு நடைபெற்ற நாள்: 31/08/2018
16) எழுத்தாளர் பெரியார்:
சமூக மாற்றத்திற்காக அயராது உழைத்த தந்தை பெரியாரின் கருத்துகள், கொள்கைகள் மற்றும் அவர் மீது எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவற்றை குறித்து விவாதத்திற்காக 'எழுத்தாளர் பெரியார்' என்ற பெயரில் 2017-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17-ஐ ஒட்டி முதல் முழுநாள் நிகழ்வு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காலமான 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் பேஸ்புக் லைவ் வழியாக வாசகசாலை முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. கடைசியாக 2022-ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
2017 முதல் 2022 வரை 6 நிகழ்வுகள்
17) எழுத்தாளர் அம்பேத்கர்:
புரட்சியாளர் அம்பேத்கர் என்னும் மாபெரும் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் மற்றும் அவரது கொள்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக 'எழுத்தாளர் அம்பேத்கர்' என்ற பெயரில் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதியை ஒட்டி முதல் முழு நாள் நிகழ்வு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காலமான 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் பேஸ்புக் லைவ் வழியாக வாசகசாலை முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. கடைசியாக 2022-ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
2018 முதல் 2022 வரை 5 நிகழ்வுகள்
18) எழுத்தாளர் மார்க்ஸ்:
அறிவுப் பேராசான் கால் மார்க்ஸ் அவர்களின் கொள்கைகள் மற்றும் கருத்துகள் குறித்து விவாதிப்பதற்காக ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள்ளான மே ஐந்தாம் தேதியை ஒட்டி 'எழுத்தாளர் மார்க்ஸ்' என்ற பெயரில் முதல் முழு நாள் நிகழ்வு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காலமான 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் பேஸ்புக் லைவ் வழியாக வாசகசாலை முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. கடைசியாக 2022-ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
2018 முதல் 2022 வரை 5 நிகழ்வுகள்
சென்னை நிகழ்வுகளின் சுருக்கம்:
நேரடி அரங்க நிகழ்வுகள்: 624
பேஸ்புக் லைவ் நிகழ்வுகள்: 204
முழு நாள் நிகழ்வுகள்: 16
மொத்தம்: 844
கூடுதலாக,
19) வாசகசாலை முகநூல் குழுவில் 'உரையாடல்' என்ற தலைப்பில் தினசரி ஒரு சிறுகதை எடுத்துக் கொள்ளப்பட்டு, குழு உறுப்பினர்கள் அதை வாசித்து விட்டு அதைப் பற்றி கமெண்டுகளில் உரையாடுவது அல்லது அது குறித்த சிறிய விமர்சன வீடியோவை குழுவில் வெளியிடுவது என கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடத்தி வந்தோம்
08/04/2020 முதல் 16/05/2021 வரை 400 நாட்கள்
20) வாசகசாலை முகநூல் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் சரியாக இரவு 10 மணிக்கு 'கவிதை இரவு' என்ற பெயரில் நவீன தமிழ் கவிஞர் ஒருவரின் கவிதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை வாசிப்பது மற்றும் அது குறித்து உரையாடுவது என தினசரி நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வந்தோம். இந்த நிகழ்வில் 900-க்கும் மேற்பட்ட கவிஞர்களது கவிதைகள் வாசிக்கப்பட்டு அது பற்றிய கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது
03/05/2019 முதல் 30/11/2021 வரை 930 நாட்கள்.
**********
வெளியூர் நிகழ்வுகள் (02/2018 முதல் 03/2020 வரை)
சென்னையில் நூலகங்களிலும் வெளியிடங்களிலும் நாங்கள் தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடத்துவதைக் குறித்து வாசகசாலையின் முகநூல் பக்கத்தில் அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும். அதைக்கண்டு பிற ஊர்களில் இருக்கும் நண்பர்களும் 'ஏன் எங்கள் ஊரிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாதா?' என்று அவ்வப்போது கேட்பது உண்டு. அதன்படி வெளியூரில் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை முகநூலில் வெளியிட்டோம். ஆர்வம் தெரிவித்த நண்பர்களை சேர்த்துக்கொண்டு முதற்கட்டமாக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை தவிர்த்து கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஐந்து ஊர்களில் வாசகசாலையின் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்தது.
அதைத் தொடர்ந்து மேலும் புதிய ஊர்களுக்கான அறிவிப்புகளை முகநூலில் வெளியிட்டு ஆர்வம் தெரிவிக்கும் நண்பர்களை சேர்த்துக்கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்தினோம். இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேல் நிகழ்ச்சிகள் எல்லாம் அந்த ஊரில் உள்ள மாவட்ட மைய நூலகம் அல்லது கிளை நூலகத்தில் நடத்தப்பட்டது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஓரளவுக்கு இயல்பு நிலையை திரும்பிய பிறகு அந்தந்த ஊர் ஒருங்கிணைப்பாளர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களினால் பெரும்பாலான ஊர்களில் மீண்டும் நிகழ்ச்சிகளை நடத்த இயலவில்லை. சேலம் மற்றும் கோவையில் மட்டும் கரோனாவிற்குப் பிறகும் மீண்டும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. அதிலும் தற்போது கோவையில் மட்டுமே நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பற்றிய விவரங்களை கீழே அளிக்கிறோம்.
தமிழகத்தில் நிகழ்வுகள் நடைபெற்ற ஊர்கள் மற்றும் இடங்கள்
1)மதுரை - வாசகசாலை மற்றும் திரைக்களம் இரண்டு வகை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது - மூட்டா அரங்கு, ஸ்ரீராம் ஹோட்டல் உள்ளிட்ட வெளி இடங்கள்
2) கோவை - பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி மற்றும் மாவட்ட மைய நூலகம் (தற்போது மாவட்ட மைய நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது)
3) திருப்பூர் - மாவட்ட மைய நூலகம் மற்றும் குமரன் விடுதி
4) திருச்சி - மாவட்ட மைய நூலகம்
5) வேலூர் - மாவட்ட மைய நூலகம்
6) சேலம் - மாவட்ட மைய நூலகம்
7) திருவாரூர் - மாவட்ட மைய நூலகம்
8) தூத்துக்குடி - மாவட்ட மைய நூலகம்
9) நெல்லை - மாவட்ட மைய நூலகம்
10) செங்கல்பட்டு - மாவட்ட மைய நூலகம்
11) கும்பகோணம் - கார்த்திக் டியூஷன் சென்டர்
12) தஞ்சாவூர் - பெசண்ட் அரங்கு
13) காரைக்குடி - ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி
14) திண்டுக்கல் - மாவட்ட மைய நூலகம் & வாழ்க வளமுடன் அரங்கம்
15) சின்னமனூர் - கிளை நூலகம்
16) புதுக்கோட்டை - மாவட்ட மைய நூலகம்
17) விழுப்புரம் - மாவட்ட மைய நூலகம்
18) ராஜபாளையம் - முழு நேர கிளை. நூலகம்
19) திருவண்ணாமலை - மாவட்ட மைய நூலகம்
20) திருவள்ளூர் - கிளை நூலகம்
21) ஈரோடு - மாவட்ட மைய நூலகம்
22) கன்னியாகுமரி - மாவட்ட மைய நூலகம்
23) காஞ்சிபுரம் - அறிஞர் அண்ணா கிளை நூலகம்
24) விருதுநகர் - மாவட்ட மைய நூலகம்
25) ராமநாதபுரம் - மாவட்ட மைய நூலகம்
*****
அண்டை மாநில நிகழ்வுகள் (07/2017 முதல் 03/2020 வரை)
1) புதுச்சேரி - யூனியன் பிரதேசம் - விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையம், லாஸ்பேட்
2) பெங்களூரு - வாசகசாலை மற்றும் திரைக்களம் என இரண்டு வகையான நிகழ்வுகள் நடைபெற்றது - பெங்களூர் தமிழ் சங்கம், உல்சூர்.
(இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் மறைந்த எழுத்தாளர் பாரதி மணி, எழுத்தாளர் அபிலாஷ் மற்றும் எழுத்தாளர் கண்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்)
3) மும்பை - தமிழ் பள்ளி, தாராவி
குறிப்பு: 2021-ஆம் ஆண்டு எனது அலைபேசியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஒன்றினால் வாட்ஸ் அப் குழுக்களில் உள்ள பெரும்பாலான செய்திகள் 'ஆட்டோ டெலிட்' ஆகிவிட்டதால் மேற்கண்ட ஊர்களின் அழைப்பிதழ்களை முழுமையாகத் தொகுக்க முடியவில்லை. எனவே, நிகழ்வுகளின் எண்ணிக்கை சார்ந்த தரவினை முழுமையாக அளிக்க இயலவில்லை. வருந்துகிறேன். மன்னிக்கவும். ஆனால், மிக உறுதியாக 100 நிகழ்வுகளுக்கு மேலாக நடைபெற்று இருக்கும் என்பதை அறிவேன்.
ஏன் என்றால் மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் இரண்டாம் ஆண்டு விழாக்களைக் கொண்டாடியுள்ளோம் என்பதால்தான் இதனைக் குறிப்பிடுகிறேன்.
இதர ஒருங்கிணைப்பு பணிகள்
கவிஞர் மனுஷ்யபுத்திரன் சமீபத்தில் சென்னை மாநகர நூலக ஆணை குழுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை, பொது நூலகத் துறை மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக் குழு இணைந்து நடத்திய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வாசகசாலைக்கு அளிக்கப்பட்டது அதனை நல்ல முறையில் நிறைவேற்றி இருக்கிறோம். அது பற்றிய விபரங்கள் கீழே
1) உலக புத்தக தின விழா – 23/04/2023 - சென்னையில் ஒரே நாளில் 18 நூலகங்களில் 100 ஆளுமைகள் மற்றும் வாசகர்களின் உரைகள்
2) எழுத்தாளுமைகள் தொடர்பான ஆவணத் திரைப்பட விழா