under review

பாலபாரதி

From Tamil Wiki
பாலபாரதி இதழ்

பாலபாரதி (இதழ்) (1924-25) வ.வே.சுப்ரமணிய ஐயர் நடத்திய இதழ். வ.வே.சுப்ரமணிய ஐயர் நடத்திய பாரத்வாஜ ஆசிரமத்தின் சார்பில் இவ்விதழ் வெளியிடப்பட்டது. தேசியக் கருத்துக்களை வெளியிட்டது.

வெளியீடு

வ.வே.சுப்ரமணிய ஐயர் 1924ல் அவர் சேரன்மாதேவி ஊரில் தொடங்கிய பாரத்வாஜ ஆசிரமம் தமிழ்க்குருகுலப் பள்ளி சார்பில் பாலபாரதி இதழை தொடங்கினார்.1924 அக்டோபர் மாதம் முதல் இதழ் வெளியாகியது. இது ஓர் மாத இதழ். இதில் எண்கள் முழுக்க தமிழிலேயே அமைந்திருந்தன. 1925ல் வ.வே.சு.ஐயரின் மறைவுடன் இதழ் நின்றுவிட்டது

உள்ளடக்கம்

பாலபாரதி இதழில் குருகுலச் செய்திகளுடன் தேசிய அரசியல் செய்திகளும் வெளியிடப்பட்டன. இலக்கியக் குறிப்புகளும், சிற்பச்செல்வங்கள் பற்றிய கட்டுரைகளும் இருந்தன. வ.வே.சு.ஐயரே பெரும்பாலான பக்கங்களை எழுதினார். ராஜகோபாலன் கடிதங்கள் என்ற பெயரில் பல கடிதங்களை அவரே எழுதினார். கம்பராமாயண ரசனை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடர் வெளிவந்தது. நெப்போலியன் வரலாற்றையும் எழுதிவெளியிட்ட இதழ் ஆங்கில அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. வீர சவார்க்கரின் கடிதங்கள் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன. எஸ். வையாபுரிப் பிள்ளை. பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை , சுத்தானந்த பாரதி , ரா.அனந்தகிருஷ்ணன், ப.ஆதிமூர்த்தி ஆகியோரின் இலக்கியக் கட்டுரைகளும் நா.முத்துவையர் எழுதிய இசைக்கட்டுரைகளும் வெளிவந்தன. ஆலோக அவலோகனம் என்னும் பெயரில் ஐயர் தன் அரசியல் கருத்துக்களை எழுதினார்.

உசாத்துணை

  • வ.வே.சு.ஐயர் கோ.செல்வம். சாகித்ய அக்காதமி வெளியீடு


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.