under review

வரலொட்டி ரெங்கசாமி

From Tamil Wiki
Revision as of 18:18, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom and added References)
வரலொட்டி ரெங்கசாமி

வரலொட்டி ரெங்கசாமி (ஏப்ரல் 29, 1958) வெகுஜன இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய கதைகள், தொடர்கதைகள் முதலியவற்றை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறார். 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

வாழ்க்கைக்குறிப்பு

பிறப்பு

வரலொட்டி ரெங்கசாமி விருதுநகர் மாவட்டம் வரலொட்டியில் ரெங்கசாமி- பத்மாசனி தம்பதியருக்கு ஏப்ரல் 29, 1958இல் பிறந்தார். இவரின் இயற்பெயர் ரெ. ஸ்ரீதரன்.

கல்வி

பட்டயக் கணக்காளர் பட்டமும் சி.எஸ். (கம்பெனி செக்ரட்டரி), பி.ஜி.எல். (சட்டம்) ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.

பணி

மதுரையில் ஆடிட்டராகப் பணியாற்றுகிறார்.

குடும்பம்

வரலொட்டி ரெங்கசாமிக்கு மனைவியும் மகளும் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

வரலொட்டி ரெங்கசாமிககு ஆதர்சனம் எழுத்தாளர் ஜெயகாந்தன், எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் அப்துல்ரகுமான் ஆகியோர் ஆவர். இவர் 1997 முதல் வெகுஜன இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய கதைகள், தொடர்கதைகள் போன்றவற்றை எழுதி வருகிறார். தினமலர் ஆன்மிக மலரில் மூன்று ஆண்டுகளாகப் ‘பச்சைப்புடவைக்காரி’ என்ற தொடரை எழுதினார். எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரை 73 புத்தகங்களை (53 தமிழ், ஆங்கிலம் 20) எழுதியுள்ளார். இவரின் எழுத்தில் முதன்மைக்கருக்களாக வெகுஜனஆன்மிகம் சார்ந்த கருத்துக்கள் அமைவு கொண்டுள்ளன.

இலக்கிய இடம்

வெகுஜனஆன்மிகம் சார்ந்த கருத்துகளைத் தன் எழுத்தின் வழியாகப் பொதுவாசகர்களுக்குக் கொண்டுசேர்த்தவர் என்ற வகையில் இவரின் எழுத்துகள் முதன்மைத்துவம் பெறுகின்றன. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை இந்திரா நீலமேகம், சிவி கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீநிவாசன் ஆகிய மூவரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து வரலொட்டி ரெங்கசாமியும் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பாளராகவும் இவரின் இலக்கிய இடம் குறிப்பிடத்தக்கது.

நூல்கள்

  • மரணத்தின் தன்மை சொல்வேன்
  • அச்சம் தவிர் உச்சம் தொடு
  • கண்ணா வருவாயா
  • நீ என்னுடன் இருந்தால்
  • பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம்
  • நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை
  • மனசே, மனசே கதவைத் திற...
  • வல்லமை தாராயோ
  • அழகே உன்னை ஆராதிக்கிறேன்
  • இறைவன் என்றொரு கவிஞன்
  • சொல்லடி சிவசக்தி
  • தேவதையைக் கண்டேன்
  • வெற்றியின் விதைகள் (மனவளம்)
  • காத்திருந்தால் வருவேன்
  • காக்கைச் சிறகினிலே...
  • ஆனந்தம் இன்று ஆரம்பம்
  • உள்ளத்தில் நல்ல உள்ளம்
  • ஓர் இனிய உதயம்
  • தீர்த்தக்கரையினிலே
  • பச்சைப்புடவைக்காரி
  • தாயென வந்தவள்
  • சிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம்
  • பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை
  • பொன்னைவிரும்பும் பூமியிலே
  • வாராய் என் தோழி
  • மீண்டும் பச்சைப்புடவைக்காரி
  • வானமழை நீ எனக்கு
  • அருள்மழை தாராயோ
  • ஒரு காதல் கதை
சிறுகதைத்தொகுப்புகள்
  • ஜன்னல்
  • விசாரணை
சுயசரிதை நூல்
  • நல்லதோர் வீணை செய்தேன்
மொழிபெயர்ப்புகள்
  • ஓஷோவின் தாவோ ஒரு தங்கக்கதவு
  • களம் கண்ட வீரர்களின் காதல் கதைகள்
  • பொன்னியின் செல்வன்

விருதுகள்

  • தமிழக அரசின் மதநல்லிணக்க விருது - 2000

உசாத்துணை

இணைப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.