being created

ஏ.கே. சுப்பிரமணியன்

From Tamil Wiki
Revision as of 15:05, 7 August 2024 by Ramya (talk | contribs) (Created page with "ஏ.கே. சுப்பிரமணியன் (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், பாடகர். == வாழ்க்கைக் குறிப்பு == ஏ.கே. சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஏ.கே. சுப்பிரமணியன் (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், பாடகர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஏ.கே. சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்.

நாடக வாழ்க்கை

ஏ.கே. சுப்பிரமணியன் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் இருந்தார். சுவாமிகளின் கம்பெனி திண்டிவனத்தில் இருந்தபோது டி.ஆர். ராமகிருஷ்ணன் என்ற பாட்டா ராமகிருஷ்ணன் கம்பெனியை விட்டு விலகினார். அவர் இடத்தை ஏ.கே. சுப்பிரமணியன் பூர்த்தி செய்தார். வள்ளி நாடகத்தில் வேலன் - வேடன் - விருத்தன் முதலிய பாத்திரங்களில் ஏ.கே. சுப்பிரமணியன் பாடிய பாடல்கள் புகழ்பெற்றன. இவரின் இசைத்திறம் நடிகர்கள், மக்களின் பாராட்டைப் பெற்றது.

நடித்த நாடகங்கள்

  • சத்தியவான் சாவித்ரி
  • வள்ளி திருமணம்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.