உமாபதி சிவாசாரியார்
உமாபதி சிவாசாரியார்(உமாபதி சிவம், கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்) (பொ.யு. 14-ம் நூற்றாண்டு)
வாழ்க்கைக் குறிப்பு
தாம் இயற்றிய சங்கற்ப நிராகரணத்தில் பாயிர வரிகள் 26-29ல் தான் இன்னூலை இயற்றிய காலம் சகம் ஆண்டு 1235 என்று குறித்துள்ளார். எனவே பொ.யு. 1313-ல் இன்னூல் இயற்றப்பட்டிருக்கிறது எனலாம். ஆகவே, ”உமாபதி சிவத்திற்கு எண்பத்தோராண்டுகட்கு முன் கி.பி 1232-ல் மெய்கண்ட தேவர் இருந்தனர் என்பது எவ்வாற்றானும் ஏற்புடைத்தேயாம்” என்கிறார் பேராசிரியர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்.
தில்லையில், தீட்சிதர் மரபில், சம்பு தீட்சிதர் - கௌரி அம்மையார் தம்பதிக்கு கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார்.
வேதங்களையும், சிட்சை, கல்பம், வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம் என்ற ஆறு அங்கங்களையும் கற்றதோடு மட்டுமில்லாமல் திருக்குறள், பன்னிரு திருமுறைகளையும் கற்றார். வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமை பெற்றார்.
பதினாறாம் வயதில் இவருடைய திருமணம் நடந்தது. வைதீக முறையில் தீட்சைகள் செய்விக்கப்பட்டு, ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு பூஜைகள் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. எனவே உமாபதி தீட்சிதர், தமக்குரிய பூஜை முறை நாட்களில், தில்லை திருச்சிற்றம்பலத்தானுக்கு பூஜைகள் செய்தார். மற்ற நாட்களில் தனது தந்தை தமக்கு பெட்டகத்துடன் அளித்திருந்த ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜரின் அர்ச்சாவதாரங்களை (விக்கிரகங்களை) பூஜித்து வந்தார்.
ஆன்மிக வாழ்க்கை
மெய்கண்டாரை குருவாக ஏற்றல்-தொன்மக்கதை
உமாபதி சிவம் மறைஞான சம்பந்தரிடம் சீடராகச் சேர்ந்த சம்பவம் பற்றிய ஓர் தொன்மம் நிலவுகிறது. அக்காலத்தில் தில்லை மூவாயிரவரில் முக்கியமாய்த் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தீக்ஷிதரை மேள, தாளத்தோடு பல்லக்கில் தீவட்டி மரியாதையோடு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்து வந்தது. பகல் நேரமானாலும் இந்த தீவட்டி மரியாதை உண்டு. ஒருநாள் உமாபதி சிவம் அப்படியே கோயிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு பல்லக்கில் அமர்ந்து தீவட்டி மரியாதை சகிதம், மேளதாளத்தோடு சென்று கொண்டிருந்தார். அங்கே ஓர் வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்த மறைஞான சம்பந்தர் இதைக் கண்டதும், "பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்!" என்று உமாபதி சிவத்தின் காதில் விழும்படி சத்தமாய்ச் சொல்லிச் சிரித்தார். அதைக் கேட்ட உமாபதி சிவத்திற்கு அதன் அர்த்தம் விளங்கியது. பல்லக்கிலிருந்து அப்படியே குதித்து மறைஞான சம்பந்தரின் கால்களில் விழுந்து வணங்கித் தன்னை சீடனாக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். மறைஞானசம்பந்தர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவம் அவரைப் பின்பற்றினார். சற்றுத் தூரம் சென்ற மறைஞான சம்பந்தர் ஒரு வீட்டின் வாசலில் நிற்க அங்கே அவர் கைகளில் கூழை வார்த்தனர். அந்தக் கூழை அப்படியே கைகளில் ஏந்திக் குடித்தார் மறைஞான சம்பந்தர். அப்போது கூழ் அவர் கைகளின் வழியே வழிந்தது. உமாபதி சிவம் சிந்திய கூழை குருப் பிரசாதம் எனக் கூறிவிட்டுக் கைகளில் வாங்கிக் குடித்தார். அன்று முதல் அவரின் சீடரானார்.
மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தத் தெளிவு பெற்று, அவரின் தலைமை மாணவராகவும் உயர்ந்தார். அன்றைய நெறிகளை மீறி தில்லை மூவாயிரவர் அல்லாத ஒருவரை குருவாக ஏற்றதால் மூவாயிரவர் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு பூசை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. ஊரை விட்டு விலகி சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் கொற்றவன்குடி' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வந்தார். அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்து உதவினார். நாளடைவில் இம்மடம் 'கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்' எனப் பெயர் பெற்றது. உமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்நாட்களில் வடமொழி பவுட்கர ஆகமத்துக்கு வடமொழியில் விருத்தியுரை, சிவபரத்துவமான கருத்துக்களோடு ஸ்ரீநடராஜர் ஆலய அமைப்பைப் புலப்படுத்துகின்ற ' குஞ்சிதாங்கிரி ஸ்தவம்' என்ற வடமொழி தோத்திர நூல் முதலியவற்றையும் இயற்றினார் உமாபதி. அன்றிருந்த ஜாதிக் கட்டுகளை மீறி, மறை ஞானசம்பந்தரிடம் ஞான தீட்சை பெற்றார். இதனால் ஊரை விட்டு விலகவும் நேர்ந்தது.
மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தத் தெளிவு பெற்று, அவரின் தலைமை மாணவராகவும் உயர்ந்தார். சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் கொற்றவன்குடி' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வரலானார் உமாபதி சிவம். அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்து உதவினார். நாளடைவில் இம்மடம் 'கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்' எனப் பெயர் பெற்றது. உமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
மெய்கண்டாரின் சிவஞான போதம் நூலுக்கான புடைநூல்.
உமாபதி சிவாசாரியார் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற பல நூல்களைக் கற்று, மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தத் தெளிவு பெற்று, அவரின் தலைமை மாணவராகவும் உயர்ந்தார். சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் கொற்றவன்குடி' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வரலானார் உமாபதி சிவம். அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்து உதவினார். நாளடைவில் இம்மடம் 'கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்' எனப் பெயர் பெற்றது. உமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
சிதம்பரம் நடராஜருக்குப் பூசை செய்யும் உரிமை கொண்ட உமாபதி சிவத்தை , தீட்சிதர் அல்லாதவரைத் தன் குருவாக ஏற்றதால் மூவாயிரவர் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு பூசை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வேறொருவருக்குச் சென்றது. எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனர். உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடவும் கொடி ஏறியது. இந்தப் பாடல்கள் 'கொடிக்கவி' என அழைக்கப்பட்டன. எசைவ சித்தாந்தக் கருத்துக்களைக் கொண்ட குறள் வெண்பாக்களால் ஆன நூல் 'திருவருட்பயன்'.
மறைவு
உமாபதி சிவாசாரியார் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தன்று கொற்றவன்குடி திருமடத்தில் சிவனோடு கலந்தார்.
நூல்கள்
- சிவப்பிரகாசம்
- திருவருட்பயன்
- வினாவெண்பா
- போற்றிப் பஃறொடை
- கொடிக்கவி
- நெஞ்சுவிடு தூது
- உண்மைநெறி விளக்கம்
- சங்கற்ப நிராகரணம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.