being created

எம்.என். காரஸேரி

From Tamil Wiki
Revision as of 21:32, 29 July 2024 by Madhusaml (talk | contribs) (Added stage template & language template)
எம்.என்.காரஸேரி
எம்.என்,காரஸேரி

எம்.என்.காரஸேரி (எம்.என்.காரசேரி) முஹயத்தீன் நடுக்கண்டியில். (பிறப்பு : ஜூலை 2,1951) மலையாள எழுத்தாளர், மேடைப்பேச்சாளர், மொழியியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர். கோழிக்கோடு கல்லூரியிலும் அலிகட் பல்கலைகழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார்

பிறப்பு, கல்வி

எம்.என்.காரஸேரி -மனைவி

முஹயதீன் நடுக்கண்டியில் என இயற்பெயர் கொண்ட எம்.என்.காரஸேரி கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் காரஸேரி என்னும் ஊரில் ஜூலை 2,1951-ல் என்.சி.முகமது ஹாஜி- கே.சி.ஆயிஷாக்குட்டி இணையருக்கு பிறந்தார்.

எம்.என்.காரஸேரி ஷாஃபி மதாப் - ஹிதாயதுஸ்ஸிபியான் மதரஸா என்னும் என்னும் ஸுன்னி மதப்பள்ளியிலும் , இஸ்லாமிய இரவுப்பள்ளியிலும் மதக்கல்வி பெற்றார். சேந்தமங்கலூர் உயநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். சாமூதிரி குருவாயூரப்பன் கல்லூரியில் மலையாளம் இளங்கலை, கோழிக்கோடு பல்கலையில் மலையாளம் முதுகலை படிப்பை முடித்தார். தன் தாய்மாமனான என்.சி.கோயக்குட்டி ஹாஜியின் நிதியுதவியுடன் உயர்கல்வியை தொடர்ந்தார். வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளை ஆய்வுசெய்து முதுகலை ஆய்வேட்டை எழுதினார். 1974-ல் குட்டிக்கிருஷ்ண மாரார் எழுதிய மகாபாரத ஆய்வுநூலான 'பாரதபரியடனம்' என்னும் நூலை ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றார். 1993-ல் கோழிக்கோடு பல்கலையில் இஸ்லாமிய நாட்டார் இலக்கியத்தில் சுகுமார் அழிக்கோடு வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார்

மலையாள இலக்கியத்த்தில் சுகுமார் அழிக்கோடு , சம்ஸ்கிருத இலக்கியத்தில் சாத்தனாத்து அச்சுதனுண்ணி ஆகியோர் காரஸேரியின் ஆசிரியர்கள்.

தனிவாழ்க்கை

கல்விப்பணி

எம்.என்.காரஸேரி 1978-ல் கோழிக்கோடு,அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கோடஞ்சேரி அரசுக் கலைக்கல்லூரி, கோழிக்கோடு அரசு மாலைநேர கல்லூரி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். 1986 முதல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாளத்துறை தலைவராக பணியாற்றினார். മുതൽ കാലിക്കറ്റ് സർ‌വ്വകലാശാല മലയാളവിഭാഗത്തിൽ പ്രവർത്തിക്കുന്നു. 2012-ல் ஓய்வுபெற்றபின் அலிகட் பல்கலையில் பாரசீக மொழி ஆய்வுத்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2013 இறுதியில் அலிகட்டில் இருந்து ஓய்வுபெற்று கோழிக்கோட்டில் வசிக்கிறார்

குடும்பம்

எம்.என்.காரஸெரி 1978-ல் வி.பி.கதீஜாவை மணந்தார். நிஷா, ஆஷ்லி மகள்கள், முகமது ஹாரீஸ் மகன்.

இதழியல்

  • எம்.என்.காரஸேரி 1976 முதல் 1978 வரை மாத்ருபூமி வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • கேரள சாகித்ய அக்காதமி இதழான 'சாஹித்யலோகம்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • கோழிக்கோடு பல்கலையின் மலையாளத்துறை வெளியிட்ட 'மலயாள விமர்சம்' என்னும் விமர்சன இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்
  • நியுயார்க்கில் இருந்து அமெரிக்க மலையாளி சங்கம் 2001 முதல் வெளியிடும் 'ஜனனி' இதழின் இலக்கிய ஆலோசகர்

திரைப்படம்

எம்.என்.காரஸேரி குறுகியகாலம் சினிமாவில் பணியாற்றினார். 1973-ல் 'சுழி' என்னும் படத்தில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார். 1974-ல் பி.பி.மொஹிதீன் முக்கம் இயக்கிய 'நிழலே நீ சாட்சி' என்னும் படத்திற்கு திரைக்கதை எழுதினார், அது வெளிவரவில்லை. 1979-ல் 'பதினாலாம் ராவு' என்னும் படத்திற்கு திரைக்கதை எழுதினார்.

எம்.என்.காரஸேரி சுதந்திரப்போராட்டத் தியாகி இ.மொய்து மௌல்வி பற்றிய 'நூற்றாண்டிண்டே சாக்ஷி' என்னும் ஆவணப்படத்தின் திரைக்கதையை எழுதினார்.

'உம்மமார்க்கு ஒரு சங்கட ஹர்ஜி' என்னும் தன் நூலின் ஆவணப்பட வடிவமான 'எழுதாத்த கத்துக்கள்' என்னும் தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை எழுதினார். அது கேரள அரசின் விருது பெற்றது.

இலக்கியப்பணிகள்

வைக்கம் முகமது பஷீருக்கு எம்.என். காரஸேரி நெருக்கமானவராக இருந்தார். பஷீர் பற்றி எழுதிய ஆய்வுநூல்தான் அவருடைய முதல் படைப்பு. பஷீரின் கடைசி பேட்டி எம்.என். காரஸேரியால் 1994-ல் ஆல் இண்டியா ரேடியோவுக்காக எடுக்கப்பட்டது. பஷீர் வாழ்க்கைவரலாற்றைச் சாகித்ய அகாதெமிக்காக எழுதினார். 'பஷீரின்றே பூங்காவனம்' என்ற நூலையும் எழுதினார்.

எம்.என்.காரஸேரி இஸ்லாமிய நாட்டாரிலக்கியம், குறிப்பாக மாப்பிளைப் பாட்டு எனப்படும் இஸ்லாமிய நாட்டார் இசை பற்றிய முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். மாப்பிள்ளைப்பாட்டுகள், மாப்பிள்ளை நகைச்சுவைகள் (மாப்பிள்ளை என்றால் ஸுன்னி இஸ்லாமியர்) ஆகியவற்றை தொகுத்தவர். இஸ்லாமிய இசையில் புகழ்பெற்றிருந்த மோயின்குட்டி வைத்தியரின் பாடல்களை தொகுத்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்

இஸ்லாமிய தனிச்சட்டம் மற்றும் ஆசாரங்களைப் பற்றிய விவாதநூல்களை எழுதியுள்ளார். புகழ்பெற்ற சேகன்னூர் மௌல்வியின் வாழ்க்கைவரலாற்றையும் எழுதியுள்ளார். மொழியியல், சொற்பொருளியல் சார்ந்த ஆய்வுநூல்களையும் எழுதியுள்ளார்

எம்.என்.காரஸேரி முகமது ஆஸாதின் 'The Road to Mecca' என்னும் ஆன்மிகப்பயண நூலை 'மக்கயிலேக்குள்ள பாதை' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். முகமது நபியின் வழிகாட்டல்களை 'திருமொழிகள்; என்னும் பெயரிலும் குர்ஆன் வசனங்களை 'திருவருள்' என்னும் பெயரிலும் மொழியாக்கம் செய்துள்ளார். எஸ்.கே.பொற்றேக்காட்டின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தார்.

அரசியல்

எம்.என்.காரஸேரி மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் அரசியல் செயல்பாட்டாளராக அறியப்படுகிறார். அரசியலில் எவ்வகையிலும் மதம் கலக்கப்படலாகாது என்னும் கருத்தை முன்வைத்து மதேதர சமாஜம் என்னும் அமைப்பை அமைப்பை தொடங்கி அதன் தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார்.கோழிக்கோடு சாலியாறு நீரை பாதுகாப்பதற்கான சூழியல் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

விருதுகள்

  • 2007 ல் அரபு மலையாளம் குறித்த ஆய்வுக்காக பல்கலைக்கழக நிதிக்குழு விருதைப் பெற்றார்
  • 2029 வி.டி.விருது
  • 2021 பி.பாஸ்கரன் விருது
  • 2023 அபுதாபி மலையாளி சமாஜம் விருது
  • 2023 பேராசிரியர் எம்.பி.மன்மதன் விருது
  • 2023 முகமது அப்துல்ரஹ்மான் விருது
  • 2023 வாக்படானந்த குருதேவர் விருது.
  • 2024 பவனன் மதச்சார்பின்மை விருது

நூல்கள்

கட்டுரைகள்

  • Vishakalanam
  • Kurimanam
  • Alochana
  • Onninte Darshanam
  • Kazchavattam
  • Kulichallenu paranjalentha?
  • Aarum Koluthatha Vilakku
  • Chekkanoorinte Raktham
  • Thunchan Parambile Bleach
  • Basheerinte Poonkavanam
  • Vargeeyathaykkethire oru Pusthakam
  • Nireekshanathinte Rekhakal
  • Thelimalayalam
  • Pathantharam
  • Nammude Mumpile Kannadikal
  • Oru vakkinte paatham
  • Vivekam Pakam Cheyyunnathu Ethu Aduppilanu?
  • Ummamarkkuvendi Oru Sankada haraji
  • Naykkalkku Praveshanamilla
  • Jathiyekkal Kattiyulla Raktham
  • Aranu Christianikale Apamanikkunnath?
  • Islamika Rashtreeyam Vimarshikkappedunnu
  • Snehamillathavarkku Mathavishwasamilla
  • Snehichum Tharkkichum
  • Kuruthakkedil Kuricha Thudakkam
  • Vishappinte Athmeeyatha
  • Mathetharavadathe Musleengal Pedikkendathundo?
  • Thaymozhi
  • Malayala Vakku
  • Azhicode Mash
  • Anubhavam Ormma Yathra
  • Vakkinte Varavu
  • Pidakkozhi koovaruth!
  • Mathathinte Rashtreeyavum Rashtreeyathinte Mathavum
  • Enthina Malayalam Padikkunnath?

உசாத்துணை

M.N.Karaserry.com-profile



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.