இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1987
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1987
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்... | சுப்ரபாரதிமணியன் | இனி |
பிப்ரவரி | அப்பா உனக்கா? | என். பன்னீர்செல்வம் | குமுதம் |
மார்ச் | அக்னிக் குஞ்சு | ரோகாந்த் | தினமணி கதிர் |
ஏப்ரல் | வைவா வோஸ் | விட்டல் ராவ் | கணையாழி |
மே | சார்..., ரேஷன் கார்டு... | பாரிஜாதன் | கல்கி |
ஜூன் | பிள்ளைப் பிராயத்திலே | ரோகாந்த் | தினமணி கதிர் |
ஜூலை | வேலைக்குப் போகிற மருமகள் | கீதா பென்னட் | இதயம் பேசுகிறது |
ஆகஸ்ட் | காத்திருந்த வேளையில்... | கனிவண்ணன் | தீபம் |
செப்டம்பர் | பார்வை | அ. எக்பர்ட் சச்சிதானந்தம் | கணையாழி |
அக்டோபர் | புன்னகையின் பொருள் | சுஜன் | கல்கி |
நவம்பர் | பந்து பொறுக்கி | விட்டல் ராவ் | தீபம் |
டிசம்பர் | ஆட்கொள்ளும் பருவம் | ப. முருகேசன் | குங்குமம் |
1987-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1987-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்.’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சோ. சிவபாதசுந்தரம் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை பாப்ரியா தேர்வு செய்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Jan-2023, 05:55:33 IST